சொல் பேச்சை கேட்காத குழந்தைகள்! காரணம் இதுதான்!
- பேச்சை கேட்கமாட்டேன் என உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? காரணம் இதுதான்
- பேச்சை கேட்கமாட்டேன் என உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? காரணம் இதுதான்
(1 / 10)
கவனம் குறைவது - அவர்களுக்கு தேவைப்படும்போது பெற்றோர் இல்லையென்றாலோ அல்லது கவனிக்கவில்லையென்றாலோ குழந்தைகளுக்கு கோவம் வருகிறது. குழந்தைகள் பேசும்போது பெற்றோர் வேலையிலோ அல்லது ஃபோனிலோ மூழ்கியிருந்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்கிறார்கள். இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்பதில்லை.
(2 / 10)
அதிக கட்டளைகள் - பெற்றோர் தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கும்போது, அது குழந்தைகளுக்கு அதிகப்படியாகத் தோன்றும். இதனால் அவர்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட தேர்வுகளுக்காக பெற்றோரை எதிர்க்கத் துவங்குவார்கள்.
(3 / 10)
தெளிவில்லாத உரையாடல் - தெளிவற்ற அறிவுறுத்தல்கள் உங்கள் குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்காமல் போய்விடுகிறார்கள். தெளிவான மற்றும் எளிய உரையாடல்கள் மட்டுமே குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.
(4 / 10)
எதிர்மறை அல்லது விமர்சனம் - நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கடினமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது, கத்தும்போது அல்லது அதிகம் அவர்களை விமர்சிக்கும்போது குழந்தைகளுக்கு பயம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் நீங்கள் கூறுவதை கவனிக்காமல அலட்சியப்படுத்துகிறார்கள்.
(5 / 10)
அதிக விதிகள் - அதிக விதிகள் குழந்தைகளுக்கு அதிகம்தான். இதனால் அவர்கள் உங்களின் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை, தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அவர்களை போராளிகளாக்குகிறது.
(6 / 10)
கவன ஈர்ப்பு - சில நேரங்களில் குழந்தைகள், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நீங்கள் கூறுவதை கேட்காமல் இருக்கலாம். உங்கள் அறிவுறுத்தல்களை தவிர்ப்பது அல்லது நடிப்பது ஆகியவற்றை அவர்கள், அவர்களின் தீர்க்கப்படாத உணர்வு தேவைகளை வெளிக்காட்டும் ஒரு வழியாக எண்ணிக்கொள்கிறார்கள்.
(7 / 10)
பெற்றோரிடம் தொடர்பு இல்லாததால் - பெற்றோருடன் உணர்வு ரீதியான தொடர்பு இல்லாவிட்டால் கூட, அது அவர்களிடம் உரையாடலை குறைக்கிறது. குழந்தைகள் அன்னியமாகவும் அல்லது புரிந்துகொள்ளப்படாமலும் உணர்ந்தால் அவர்கள் தங்கள் பெற்றோர்களுடனான உரையாடலை நிறுத்திக்கொள்கிறார்கள்.
(8 / 10)
பெற்றோரை எதிர்க்க வயதும் காரணம் - குழந்தைகள் வளரவளர குறிப்பாக குழந்தையில் இருந்து டீன்ஏஜ் பருவத்தை எட்டும்வேளையில், அவர்களுக்கு சுதந்திரம் என்பதை இயற்கையாகவே விரும்புகிறார்கள். இந்த வளர்ச்சி நிலையில், அவர்கள் எல்லைகளை பரிசோதிக்க பெற்றோர்கள் கூறுவதை கவனிக்க மறுக்கிறார்கள்.
(9 / 10)
தொடர்ச்சியற்ற ஒழுக்கம் - விதிகள் மற்றும் சிக்கல்கள் தொடர்ந்து இல்லாமல் இருந்தால், குழந்தைகள் தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை. நீங்கள் தொடர்ந்து எதையும் செய்யும்போதுதான், உண்மை மற்றும் தெளிவு பிறக்கிறது. இது குழந்தைகளை கவனிக்கத் தூண்டுகிறது.
(10 / 10)
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
மற்ற கேலரிக்கள்