இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் விழிப்பவரா நீங்கள்? அச்சச்சோ! அதனால் ஏற்படும் ஆபத்தை பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் விழிப்பவரா நீங்கள்? அச்சச்சோ! அதனால் ஏற்படும் ஆபத்தை பாருங்கள்!

இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் விழிப்பவரா நீங்கள்? அச்சச்சோ! அதனால் ஏற்படும் ஆபத்தை பாருங்கள்!

Nov 04, 2024 03:36 PM IST Priyadarshini R
Nov 04, 2024 03:36 PM , IST

  • இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் விழிப்பவரா நீங்கள்? அச்சச்சோ! அதனால் ஏற்படும் ஆபத்தை பாருங்கள்!

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் - உறக்கம் போதிய அளவு இல்லாவிட்டால், அது உங்கள் உடலின் கார்டிசால் அளவை அதிகரிக்கும். கார்டிசால் என்பதுதான் உடலின் முக்கியமான மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். காலப்போக்கில் அது உங்களுக்கு அதிக பதற்றத்தைத் தரும். இது உங்களுக்கு ஓய்வைக் கொடுக்காது. இதனால் நீங்கள் அமைதிகொள்ள முடியாமல் அவதிப்படுவீர்கள். இதனால் உங்களுக்கு இதய பிரச்னைகள் ஏற்படும். உங்கள் உடலில் கார்டிசாலின் அளவு நீண்ட நேரம் நீடிக்கும்.

(1 / 10)

நோய் எதிர்ப்பாற்றலை பலவீனமாக்கும் - உறக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ரீசார்ஜ் செய்யும் ஒரு கருவியாகும். குறைவான உறக்க சுழற்சி உங்கள் தொற்றுக்களை எதிர்த்து போராடும் செல்களின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் குணமாகும் நேரத்தையும் அதிகரிக்கும்.

(2 / 10)

கவனம் குறையும், மூளை மந்தமாகும் - சோர்வடைந்த மூளையால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. நீங்கள் போதிய அளவு நேரம் உறங்காவிட்டால், உங்களால் எந்த விஷயத்திலும் கவனம்செலுத்த முடியாது. இது உங்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை பாதிக்கும். இதனால் உங்களின் வேலைத்திறன் பாதிக்கும். உங்களால் அன்றாட பிரச்னைகளை கையாள முடியாது.

(3 / 10)

நினைவாற்றல் இழப்பு மற்றும் கற்றல் கோளாறுகள் - நீங்கள் நன்றாக உறங்கவில்லையென்றால், அது உங்களின் நினைவாற்றலை பாதிக்கும். இதனால் உங்களால் புதிய தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் போதிய ஓய்வு எடுக்கத் தவறிவிட்டால், நினைவாற்றலை இழக்க நேரிடும். உங்களுக்கு மறதி அதிகரித்துவிடும். நீங்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்வதிலும் உங்களுக்கு சிக்கல் ஏற்படும்.

(4 / 10)

ஹார்மோன்களை பாதிக்கும் - உங்கள் உடலில் ஹார்மோன்கள் உற்பத்தி சரியான முறையில் நடப்பதற்கு உறக்கம் உதவுகிறது. போதிய அளவு உறக்கம் இல்லாமல், பசி மற்றும் வளர்சிதையை பராமரிக்கும் ஹார்மோன்கள் பாதிக்கப்படக்கூடும். இதனால் உங்களின் பசி மற்றும் பசி உணர்வு, சாப்பிடும் எண்ணம் ஆகியவை அதிகரிக்கும். இதனால் உங்களின் உடல் எடை குறையும்.

(5 / 10)

உடல் எடை அதிகரிப்பு - நீங்கள் சரியாக உறங்கவில்லையென்றால், அது உங்களுக்கு கெரிலின் என்ற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு அதிக பசி ஏற்படும். இது லெப்டினின் அளவை குறைக்கும். இந்த ஹார்மோன் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். இந்த மாற்றங்கள் நீங்கள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும். இதனால் நீங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட முடியாது. இது நாட்கள் செல்லச்செல்ல உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்கும்.

(6 / 10)

வயோதிக தோற்றம் மற்றும் முகச்சுருக்கம் - உங்கள் சருமத்தை சரிசெய்துகொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும் உறக்கம் மிக முக்கியமான ஒன்றாகும். உங்களுக்கு போதிய உறக்கம் இல்லையென்றால், உங்கள் சருமத்தை அது பாதிக்கும். உங்களுக்கு கருவளையங்கள் ஏற்படும். கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படும். முகம் வீங்கியது போன்ற தோற்றம் காணப்படும். சருமத்தில் சுருக்கங்கள் தோன்றும். நாள்பட்ட உறக்க குறைபாடுகள், உங்கள் உடலில் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தி, நிரந்தரமாக வயோதிக தோற்றத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.

(7 / 10)

இதய நோய்கள் - வழக்கமாற்ற உறக்க பழக்கம், உங்களின் சிர்கார்டியன் ரிதம் அதாவது விழிப்பு மற்றும் உறக்க சுழற்சியை மாற்றிவிடும். இதனால் உங்களின் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். ரத்த அழுத்தம் உண்டாகும். காலப்போக்கில் உங்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்.

(8 / 10)

மனத்தடுமாற்றம் மற்றும் எரிச்சல் - சரியாக உறங்காவிட்டால், அது உங்களை உணர்வு ரீதியான மேலாண்மையை பாதிக்கும். இதனால் உங்களின் மனநிலையை நீங்கள் பராமரிப்பது கடினமாகும். இதனால் உங்களுக்கு எரிச்சல் மற்றும் பொறுமையின்மை ஏற்படும். நீங்கள் பதற்றமும் அடைவீர்கள். காலப்போக்கிறல், உங்களுக்கு மனநிலை கோளாறுகள் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை ஏற்படும்.

(9 / 10)

உடல் சார்ந்த நடவடிக்கைகளைக் குறைக்கும் - உங்கள் தசைகளை சரிசெய்ய உறக்கம் இன்றியமையாதது ஆகும். இது உங்கள் உடலின் ஆற்றலுக்கு தேவை. விளையாட்டு வீரர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள், மெதுவாகிவிட்டால், அவர்களால் முன்புபோல் ஒருங்கிணைந்து செயல்படமுடியவில்லையென்றால், இவர்களுக்கு போதிய உறக்கம் கிடைக்காவிட்டால், உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்