தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Archana Chandhoke Anchor Latest Interview About Women Harassment Kollywood Adjusment Social Media Negativity

Archana Chandhoke: ‘பெண்கள பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே.. தங்க ஆண்மகன்களும்…’ - வெளுத்த அர்ச்சனா!

Feb 21, 2024 10:06 AM IST Kalyani Pandiyan S
Feb 21, 2024 10:06 AM , IST

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில தவறுகளும் இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன. என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் அந்த காரியத்தை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு அறிமுகமே தேவையில்லை. இவர் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் பெண்களை ஆண்கள் பார்வை பற்றி பேசி இருக்கிறார்.    

(1 / 6)

அதில் அவர் பேசும் போது, “18 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் நீங்கள் வளர்ந்து விடுகிறீர்கள். இப்போது வரை எங்களது வீட்டில் பெரியோர்களை பார்த்தால் கைகூப்பி வணக்கம் சொல்வோம். அவர்களது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம்.  இன்றைய காலகட்டத்தில் ஒரு சில தவறுகளும் இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன.என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் அந்த காரியத்தை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.    

(2 / 6)

இன்று அட்ஜஸ்ட் பண்ணி செல்லுதல், காஸ்டிங் கோச் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகப்படியாக உலாவுகின்றன. இது மற்ற துறைகளில் இருப்பதைவிட மீடியா துறையில் அதிகமாக இருக்கிறது.  ஸ்லீவ் லெஸ் டி சர்ட் அணிந்து ஒரு பெண் வருகிறாள் என்றால், அவள் மீது கையை போட்டால் போதும் வந்துவிடுவாள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னர் நான்  ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போடுவதை நிறுத்திக் கொண்டேன். பெண்ணை பற்றி பேசக்கூடிய எல்லா கெட்ட வார்த்தைகளும் அவளது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிடுவதாகவே இருக்கிறது.    

(3 / 6)

ஒரு பெண்ணை அவளது கண், காது, மூக்கு வாய் உள்ளிட்ட எதை வைத்தும் அடையாளப்படுத்தவில்லை. அவளது கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறுப்பை வைத்து மட்டும் நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள்.  

(4 / 6)

எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கிருந்தே பார்க்கிறீர்கள்.  என்னுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து இப்போது வரைசிறந்த ஆண்களோடு நான் வேலை பார்த்திருக்கிறேன். வெளியே ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் 

(5 / 6)

கண்ணாடியை பார்க்கும் பொழுது என்ன அர்ச்சனா இப்படி செய்து விட்டாயே என்று ஃபீல் செய்யக்கூடாது அது மட்டும் தான் என்னுடைய குறிக்கோள். இதுவரை அந்த மாதிரியான ஒரு தருணம் நடந்தது இல்லை என்பதை நான் இங்கு பெருமையாக கூறிக் கொள்கிறேன்” என்று பேசினார். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்