குடிபோதையில் கமெண்ட் அடித்த கிட்டாரிஸ்ட்.. தூக்கம் தொலைத்த ரஹ்மான்.. தலைகீழாக திரும்பிய வாழ்க்கை!
நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். ஆகையால், அவர்களின் இசையானது எனக்குள் மிகவும் ஆழமாக ஊன்றி போனது. அதனால் என்னுடைய இசையில் இருந்து, அவர்களிடமிருந்து பெற்ற இசையே பெரும்பான்மையான நேரங்களில் வந்து கொண்டிருந்தது. - ரஹ்மான்!
(1 / 6)
உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இச ஏ ஆர் ரஹ்மான். சிறு வயதிலேயே அப்பாவை இழந்த அவர், வீட்டின் வறுமையை போக்க, தான் தாயால் வலுக்கட்டாயமாக இசைத்துறையில் தள்ளப்பட்டவர்மணிரத்னம் கொடுத்த வாய்ப்புமணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தன்னுடைய தனித்துவமான திறமையால், இன்றும் இசைத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் ஓடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார்.
(2 / 6)
அந்த பேட்டியில் குடிகார கிட்டாரிஸ்ட் ஒருவர் பேசிய பேச்சுதான் நான் தனித்துவமான இசையை நோக்கி நகர்வதற்கு உந்துதலாக இருந்தது என்று பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் பேசும் பொழுது,' நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். ஆகையால், அவர்களின் இசையானது எனக்குள் மிகவும் ஆழமாக ஊன்றி போனது. அதனால் என்னுடைய இசையில் இருந்து, அவர்களிடமிருந்து பெற்ற இசையே பெரும்பான்மையான நேரங்களில் வந்து கொண்டிருந்தது.
(3 / 6)
அவர் கேட்ட கேள்விஇந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் என்னுடைய இசைக் குழுவில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் நன்றாக குடித்து இருந்தார். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த அவர், நீ என்ன வாசிக்கிறாய்... படங்களுக்கான இசையைதானே நீ வாசித்துக் கொண்டிருக்கிறாய் என்றார். அந்த மொமெண்டில், என்னால் அவர் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால், வாரங்கள் செல்லச் செல்ல அவர் உண்மையில் என்ன சொன்னார் என்பதை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சொன்ன அந்த கமெண்ட், என்னை தலைகீழாக போட்டு திருப்பி அடித்தது என்று சொல்லலாம்.
(4 / 6)
என்னுடைய இசையை அவர் சொன்னது மிகச் சரியானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து, அவர்கள் இசையமைக்கும் இசையின் மூலமாக அதிகமாக இன்ஸ்பையர் செய்யப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிந்தது.அந்த புரிந்த மொமென்டில் இருந்து நான் எனக்கான இசையை தேடி அலைய ஆரம்பித்தேன்.
மற்ற கேலரிக்கள்