தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Palli Vilum Palankal: பல்லி உடலில் இந்த இடத்தில் விழுந்தால் லாபம், இந்த இடத்தில் விழுந்தால் கேடு - பல்லி விழும் பலன்கள்!

Palli Vilum Palankal: பல்லி உடலில் இந்த இடத்தில் விழுந்தால் லாபம், இந்த இடத்தில் விழுந்தால் கேடு - பல்லி விழும் பலன்கள்!

May 05, 2024 04:19 PM IST Marimuthu M
May 05, 2024 04:19 PM , IST

  • Palli Vilum Palankal: பல்லி உடலின் பல்வேறு பகுதிகளில் விழுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

Palli Vilum Palankal: பல்லி நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் சர்வ சாதாரணமாக ஊரக்கூடிய ஊர்வன வகுப்பைச் சார்ந்த உயிரினம் ஆகும். பல்லி நம் உடலின் சில பாகங்களில் விழுவதை வைத்து சொல்லக் கூடிய பலன்கள் பற்றி, கவுளி சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிட ரீதியாக பல்லி நம் வீட்டில் ஊர்வது, நம் வீட்டில் பாஸிடிவ் சக்தி நிறைந்திருப்பதை மறைமுகமாக சுட்டுகிறது என்கின்றனர், நிபுணர்கள்.

(1 / 7)

அதேபோல் ஒருவர் ஒன்றை நினைக்கும்போது, பல்லி எனப்படும் கவுளி சத்தமிட்டால் அது நடக்கும் எனவும் இந்து மரபில் கூறப்படுகிறது.பல்லியை, கர்நாடக மாநிலத்தில் சிலர் கடவுளாக வழிபடுகின்றனர். பல்லி, மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது. இப்படிப்படும் பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

(2 / 7)

பல்லி விழும் பலன்கள்: பல்லியானது தலையில் விழுந்தால் பலரும் மரணம் நிகழும் எனக் கூறுகின்றனர். அது தவறு. பல்லி தலையில் வலது பக்கம் விழுந்தால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் நிகழும். சண்டை மட்டுமே வரும். பல்லி தலையில் இடது பக்கம் விழுந்தால் அது நம் வாழ்வில் துன்பம் வரப்போகிறது என்பதை மறைமுகமாக சுட்டுகிறது என்பது பொருள்.பாதத்தில் வலது பக்கமாக பல்லி விழுந்தால் நோய் வரும். இடது பக்கமாக,பல்லி விழுந்தால், துக்கம் வரும்.உதட்டில் வலது பக்கமாக பல்லி விழுந்தால் கஷ்டமும், இடது பக்கமாக பல்லி விழுந்தால் பணம் மற்றும் செல்வமும் வரவாய் வரப்போகிறது என்று அர்த்தம்.

(3 / 7)

கையின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் துக்கமான விஷயமும், கையின் இடது பக்கம் துன்பமும் வரப்போகிறது கவுளி சாஸ்திரம் கூறுகிறது.வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால், தானியம் வரவு கிடைக்கப்போகிறது எனவும், இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகப்போகிறது எனவும் கூறப்படுகிறது.கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகமான விஷயங்கள் உண்டாகும் எனவும், இடது பக்கம் விழுந்தால் பிரச்னைகளில் சிக்கி சிறை செல்லும் அச்சம் வரும் எனவும் பல்லி விழும் பலனில் கூறப்படுகிறது.

(4 / 7)

மேலும், பல்லியானது காதின் வலது பக்கம் விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும் எனவும், இடதுபக்கமாக விழுந்தால் லாபம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணைக்காலில் வலது பக்கம் பல்லி விழுந்தால், பிரயாணம் செய்ய வேண்டிய சூழல் வரும், கணைக்காலின் இடதுபக்கம் பல்லி விழுந்தால் சுகம் வரும்.

(5 / 7)

மணிக்கட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடையும், இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தியும் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.நகத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு அதிகரிக்கும். இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் கூடும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமியின் அருளாசியும், இடது பக்கம் பல்லி விழுந்தால் காரியசித்தியும் உண்டாகும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்