Anthony Daasan: ‘திண்டுக்கல் ரீட்டாதான் வேணும்’ - தற்கொலை வரை சென்ற அடம் பிடித்த மனசு! - ஆண்டனி தாசன் காதல் கதை!
பின்னணி பாடகர் ஆண்டனி தாசனின் காதல் கதையை இங்கு பார்க்கலாம்.
(1 / 6)
anthony daasan and his wife Dindigul Reeta latest interview about his love story struggle life karakattam
(2 / 6)
ஆண்டனி: எனக்கு வீட்டில் ஆயிரெத்துட்டு பிரச்சினைகள் இருந்தன. என்னுடைய அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டைப்போட்டுக்கொண்டு என்னை ஊரில் கொண்டு விட்டு விடுவார்கள். அப்போது என்னுடைய அப்பாயிருக்கு கண் தெரியாத காரணத்தால், வீட்டிற்கு வீடு சென்று சோறை பிச்சைக்கேட்டு சாப்பிடுவார்.
(3 / 6)
அவரோடு நானும் சாப்பாடு பிச்சை எடுக்கப் போயிருக்கிறேன். வறுமை தாண்டவம் ஆடும் போது முருங்கைக்கீரையை அவித்து சாப்பிட்ட காலமெல்லாம் உண்டு. எனக்கு திருமணம் ஆகும் போது 16 வயது. இவளுக்கு 15 வயது. நாங்கள் இருவரும் காதலித்து வந்த காரணத்தால், எங்கள் இரண்டு பேரையும் சீக்கிரமாக சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா அப்பா இருந்தார்கள். காரணம் பஞ்சையும், நெருப்பையும் பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டார்கள். அது பற்றி எரிந்து விட்டது. இனிமேல் பொறுத்தால் குடும்ப மானத்தை காற்றில் பறக்க வைத்து விடுவார்கள் என்றுதான் அந்த திருமணம் நடந்தேறியது.
(4 / 6)
மனைவி: கரகாட்டத்தை பொருத்தவரை நாம் விட்டுக்கொடுத்துதான் செல்ல வேண்டும். காரணம் நாங்கள் செல்லும் ஊர்மக்கள் என் முன்னாலேயே இவரை தவறாக பேசுவார்கள். இவர் கண் முன்னால் என்னை ஒரு மாதிரி பேசுவார்கள். எங்கள் இருவரை வைத்து ஊரை ஒரு மாதிரி பேசுவார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
(5 / 6)
ஆண்டனி: சின்ன வயதில் நான் கொஞ்சம் கோரமாக இருப்பேன். அதனால் யாருமே என்னை அருகில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். என்னுடைய 10 வயது வரை வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. இவளை நான் காதலித்துக்கொண்டிருந்த போது என்னை இவள் திருமணம் செய்து மாட்டேன் என்று சொல்லி விட்டாள். இதனால் விரக்தி அடைந்த நான், கையெல்லாம் கிழித்து, சூடு வைத்துக்கொண்டேன். தற்கொலைக்கு முயற்சி செய்தேன். கல்யாணம் ஆன பின்னரும் எங்களுக்குள் பிரச்சினை வரும் போது, ஏன்டா இவளை கல்யாணம் செய்தோம் என்ற நினைத்து என்னை நானே குத்திக்கொண்டு இருக்கிறேன்.
(6 / 6)
எங்களுக்கு உட்கார்ந்து பேசுவதற்கு கூட நேரம் இருக்காது. நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். ஒரு முறை நாங்கள் நிகழ்ச்சி ஒன்றிற்காக, ஊர் ஒன்றிற்கு செல்லும் போது, எங்கள் உடன் வருகிறேன் என்று சொன்னவர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை. அதனால் நானும் இவளும் மட்டும் மாட்டிக்கொண்டோம். அந்த இக்கட்டான சூழ்நிலையில், மாறி, மாறி சென்று சிறுநீர் கழித்துக்கொண்டு வந்து நிகழ்ச்சியை நடத்தினோம். மனைவி: சில வீடுகளில் என்னை அனுமதிப்பார்கள். இன்னும் சில வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். இப்படி பல்வேறு கஷ்டங்களை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறோம்”
மற்ற கேலரிக்கள்