‘ஆனந்தமா வாழ்வதை தடுக்க முடியாது.. வன்மத்தை கக்குவாங்க.. திமிரு இருக்கணும்..’ அன்னபூரணி அன்லிமிட்டட் உபதேசம்!
- ‘சுயமாக செயல்பட்டால் தான், அடிமை தனத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் இந்த சமுதாயத்திற்கு பயந்து அடிமைப்பட்டு தான் வழ வேண்டும். நிம்மதி, சந்தோசத்தை தொலைத்துவிடுவீர்கள். உங்களை படைத்த சக்தி, இந்த பூமியில் நீங்கள் இருக்க அந்த சக்தி தான் காரணம்’
- ‘சுயமாக செயல்பட்டால் தான், அடிமை தனத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் இந்த சமுதாயத்திற்கு பயந்து அடிமைப்பட்டு தான் வழ வேண்டும். நிம்மதி, சந்தோசத்தை தொலைத்துவிடுவீர்கள். உங்களை படைத்த சக்தி, இந்த பூமியில் நீங்கள் இருக்க அந்த சக்தி தான் காரணம்’
(1 / 5)
எல்லாரும் எப்படி செயல்படுகிறீர்கள் என்றால், மற்றவர்கள் எப்படி முடிவு செய்கிறார்களோ, அப்படி தான் நீங்கள் செயல்படுகிறீர்கள். நீங்கள் கஷ்டமா இருக்க வேண்டுமா? சந்தேசமா இருக்க வேண்டுமா? அழுக வேண்டுமா? நிம்மதியா இருக்க வேண்டுமா? என்பதை அடுத்தவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை, அடுத்தவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
(2 / 5)
நீங்களும் அப்படி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பொம்மலாட்டம் போல, உங்களை மற்றவர்கள் ஆட்டி விக்கிறார்கள். உங்கள் உடன் இருப்பவர்களும், இந்த சமுதாயமும் உங்களை அப்படி தான் ஆட்டிவிக்கிறது. ஒரு கைப்பாவையாக நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள். சுயமாக யாரும் செயல்படவில்லை. சுயமாக செயல்பட்டால் தான், அடிமை தனத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் இந்த சமுதாயத்திற்கு பயந்து அடிமைப்பட்டு தான் வழ வேண்டும்.
(3 / 5)
நிம்மதி, சந்தோசத்தை தொலைத்துவிடுவீர்கள். உங்களை படைத்த சக்தி, இந்த பூமியில் நீங்கள் இருக்க அந்த சக்தி தான் காரணம். அந்த சக்திக்கு கட்டுப்பட்டு, அது இயக்கும் வழியில் நீங்கள் இயங்கினால் தான், சந்தோசமாக வாழ முடியும். அப்போ தான், உங்களை மற்றவர்கள் ஆட்டி விக்க முடியாது. நீங்கள் ஆனந்தமாக வாழ்வதை தடுக்க முடியாது. நீங்கள் எதுக்கு வந்தீங்களோ, அதை சந்தோசமா செய்து, வாழ்க்கையை கொண்டாட்டமா வாழ்வீர்கள்.
(4 / 5)
நீங்கள் சக்தி வழியில் வாழ்ந்தால், உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை தான் பட முடியும். வன்மத்தை தான் அவர்கள் கக்க முடியும். நீங்கள் இங்கே மகாராணியா.. மகாராஜாவா வாழ்ந்துட்டு இருப்பீங்க. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் திமிராக தோன்றும்.
(5 / 5)
ஆனால், அந்த திமிரில் சக்தி இல்லை. சாதாரண மனிதன் திமிரில் ஆடும் போது, சக்தி உங்களை இயக்கும் போது, அதனால் கிடைக்கும் திமிர் தவறில்லை. சக்திக்கு கட்டுப்பட்டு, அதற்கு உண்மையா, நன்றி உணர்வோடு இருந்தால் போதும். உங்களை படைத்த சக்தியோடு இரண்டற கலந்து, அது கொடுத்த வாழ்க்கையை கொண்டாட்டமா வாழுங்கள்.
மற்ற கேலரிக்கள்