Andhra Sweets: அக்கட தேசத்து ஸ்பெஷல்.. ஸ்விட் பிரியர்களே.. ஆந்திரா சென்றால் மிஸ் செய்யாமல் சாப்பிட வேண்டிய இனிப்புகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Andhra Sweets: அக்கட தேசத்து ஸ்பெஷல்.. ஸ்விட் பிரியர்களே.. ஆந்திரா சென்றால் மிஸ் செய்யாமல் சாப்பிட வேண்டிய இனிப்புகள்

Andhra Sweets: அக்கட தேசத்து ஸ்பெஷல்.. ஸ்விட் பிரியர்களே.. ஆந்திரா சென்றால் மிஸ் செய்யாமல் சாப்பிட வேண்டிய இனிப்புகள்

Jan 26, 2025 08:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2025 08:52 PM , IST

Andhra Sweets: ஆந்திர பிரதேசம் அதன் இயற்கை அழகுக்கு மட்டுமல்ல, அதன் சுவையான உணவு வகைகளுக்கும் பிரபலமானது. ஆந்திர இனிப்புகள் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் ஆந்திரா சென்றால் மிஸ் செய்யாமல் சாப்பிடக்கூடிய இனிப்பு பலகாரங்களை தெரிந்து கொள்ளலாம்

ஆந்திரா மாநிலத்தில் உருவாகி பல்வேறு பகுதிகளில் பிரபலமாக இருந்து வரும் இனிப்பு பலகாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் ஆத்ரேயபுரம் புத்தரேகுலு, பண்டாரு லட்டு, காக்கிநாடா கஜா போன்ற இனிப்பு வகைகள் மிகவும் பிரபலமானவை. ஆந்திர மக்களால் விரும்பி ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்களை பார்க்கலாம்

(1 / 6)

பூதரேகுலு: இவை "காகித இனிப்பு" என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஆத்ரேயபுரத்தின் பிரபலமான இனிப்பு வகைகளாகும். அரிசி மாவு வேக வைத்து மெல்லிய தாள்களாக எடுக்கப்படுகின்றன. இதன் பரப்பில் வெல்லம், சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றைக் தடவி பேப்பர் போல் மடித்து வைத்து சிறப்பான முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆத்ரேயபுரம் புத்தரேகுலு, அதன் சிறப்பு பாரம்பரியம் மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டும் புவியியல் குறியீடு (GI) அந்தஸ்தை பெற்றது. இதைப்போல் அரிசேல் என்ற இனிப்பு வகை எள், வறுத்த அரிசி மாவு மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த இனிப்புகள் சங்கராந்தி பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது

(2 / 6)

பாபட்லு: பாபட்லு என்பது ஆந்திராவின் கடலோர மற்றும் ராயலசீமா பகுதிகளில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும். இது பண்டிகைகளின் போது தயார் செய்யப்படுகிறது. வெல்லம், வேர்க்கடலை மற்றும் ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் கிடைக்கும் மற்றொரு பாரம்பரியம் மிக்க இனிப்பாக மதுகுலா ஹல்வா உள்ளது. மதுகுலா நகரில் தயாரிக்கப்படும் இந்த அல்வா கோதுமை பால், சர்க்கரை மற்றும் நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது

(3 / 6)

காக்கிநாடா கோட்டம் கஜா: காக்கிநாடாவில் பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த இனிப்பு வகைகள் மெல்லிய வெளிப்புற அடுக்கு மற்றும் உள்புறத்தில் ஜூசி சிரப்புடன் இனிமையாக இருக்கும். இது மைதா, சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறப்பு செய்முறையுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பகுதியின் மற்றொரு ஸ்பெஷலாக தபேஸ்வரம் மடாட கஜா இனிப்பு பலகாரம் உள்ளது.  கோதுமை மாவு வைத்து தயார் செய்யப்படும் மெல்லிய இனிப்பாக உள்ளது

(4 / 6)

பண்டாரு லட்டு: பண்டாரு லட்டு என்பது மச்சிலிப்பட்டினம் பகுதியை சேர்ந்த இனிப்பு வகையாகும். இந்த ஸ்வீட் நிலக்கடலை, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த மற்றொரு பிரபல ஸ்வீட்டாக கோவா பில்லாலு உள்ளது. ராயலசீமாவின் பாரம்பரிய இனிப்பு வகையாக இருப்பதுடன், நாணயத்தின் வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன. சுத்தமான பால் மற்றும் சர்க்கரையுடன் தயாரிக்கப்படுகின்றன

(5 / 6)

சாலிமிடி: ஆந்திராவின் கடலோரப் பகுதிகளை சேர்ந்த இனிப்பு வகையாக சாலிமிடி உள்ளது. அரிசி மாவு, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதேபோல் கடலோர இனிப்பு வகைகளில் முக்கியமானதாக சுன்னுண்டலு உள்ளது. ராயலசீமா பகுதி ஸ்வீட்டான இது வறுத்த பேரீச்சம்பழம், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மென்மையான வட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன, இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

(6 / 6)

மற்ற கேலரிக்கள்