தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Andhra Pradesh Polls: ஆந்திர அரசியலில் திருப்பம்! முதல்வர் ஜெகனை டீலில் விட்ட விஜயம்மா! மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு!

Andhra Pradesh polls: ஆந்திர அரசியலில் திருப்பம்! முதல்வர் ஜெகனை டீலில் விட்ட விஜயம்மா! மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு!

May 11, 2024 08:34 PM IST Kathiravan V
May 11, 2024 08:34 PM , IST

  • ”மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்”

மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

(1 / 10)

மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது.

(2 / 10)

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது.(Tharun Vinny)

ஒய்.எஸ்.விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், கடப்பா தொகுதியின் தற்போதைய எம்.பி.யும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் வேட்பாளருமான அவினாஷ் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளா களமிறங்கி உள்ளார்.

(3 / 10)

ஒய்.எஸ்.விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், கடப்பா தொகுதியின் தற்போதைய எம்.பி.யும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் வேட்பாளருமான அவினாஷ் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளா களமிறங்கி உள்ளார்.(ANI)

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.விஜயம்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது மகனும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு ஒய்.எஸ்.ஆர் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.

(4 / 10)

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.விஜயம்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது மகனும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு ஒய்.எஸ்.ஆர் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.(Y.S sharmila X)

ஆந்திராவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ (எம்) ஆகியவை அங்கம் வகித்து உள்ளன.

(5 / 10)

ஆந்திராவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ (எம்) ஆகியவை அங்கம் வகித்து உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் பாஜக ஆறு மக்களவை மற்றும் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகின்றனது. ஜனசேனா இரண்டு லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது.

(6 / 10)

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் பாஜக ஆறு மக்களவை மற்றும் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகின்றனது. ஜனசேனா இரண்டு லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது.(PTI)

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

(7 / 10)

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.(Mohammed Aleemuddin)

ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவேந்தலா சட்டமன்றத் தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

(8 / 10)

ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவேந்தலா சட்டமன்றத் தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். (HT_PRINT)

ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

(9 / 10)

ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். (Tharun Vinny )

4.41 கோடி வாக்காளர்களை கொண்ட ஆந்திராவில் லோக் சபாவுக்கு 503 வேட்பாளர்களும், சட்டசபை தேர்தலில் 2,705 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

(10 / 10)

4.41 கோடி வாக்காளர்களை கொண்ட ஆந்திராவில் லோக் சபாவுக்கு 503 வேட்பாளர்களும், சட்டசபை தேர்தலில் 2,705 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.(HT_PRINT)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்