Amul vs Nandini: கர்நாடக அரசியல்வாதிகளை பொங்க வைத்த பால் விவகாரம்!
- குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
(1 / 4)
தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவில் அமுல் மற்றும் நந்தினி பால் பிராண்ட் சர்ச்சைக்கு மத்தியில் கர்நாடக அரசுக்கு சொந்தமான நந்தினி பிராண்டை ஆதரிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஹாசனில் உள்ள நந்தினி கடைக்கு சென்று பால் பொருட்களை வாங்கினார்
(2 / 4)
இது குறித்து ட்விட்டரில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள டிகேசிவக்குமார் "இன்று நான் ஹாசனில் உள்ள நந்தினி கடைக்குச் சென்று பால் பொருட்களை வாங்கினேன். நமது விவசாயிகள் மற்றும் கன்னடர்களின் சுயமரியாதையின் அடையாளமான நந்தினி பிராண்டை பாஜக அரசு அபகரிக்க முயற்சிக்கிறது பாஜக அரசு இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கன்னடர்கள் தங்கள் சுயமரியாதையை விற்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.
(3 / 4)
முதலில் கர்நாடக பால் கூட்டமைப்பை அமுல் உடன் இணைக்க முயற்சி நடந்தது. கன்னடர்கள் எதிர்த்தபோது, நந்தினி பிராண்டிற்கு ஆணி அடிக்க பாஜக Plan B-யை தயாரித்தது. நந்தினி, பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கன்னடர்களால் கட்டமைக்கப்பட்ட கர்நாடகாவின் ரத்தினம் என டி.கே.சிவக்குமார் ட்வீட் செய்தார்.
மற்ற கேலரிக்கள்