தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Amazing Health Benefits Of Different Types Of Vegetable Juice

Healthy Juice: எந்தெந்த ஜூஸ் குடித்தால் என்னென்ன நோய்கள் வராது தெரியுமா?..பிரமாதப் பலன்கள்!

Feb 29, 2024 07:44 AM IST Karthikeyan S
Feb 29, 2024 07:44 AM , IST

  • எந்த ஜூஸால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்கள் பல இருந்தாலும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை தரும் சில ஜூஸ் வகைகள் மற்றும் அவை தரும் பலன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

(1 / 6)

உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்கள் பல இருந்தாலும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை தரும் சில ஜூஸ் வகைகள் மற்றும் அவை தரும் பலன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. (freepik)

வாழைத்தண்டு: இளம் வாழைத்தண்டை நீளமாக சீவி, நீர்விட்டு அரைத்து வடிகட்டினால் சாறு தயார். இதற்கு பூவன், ஏலக்கி, கற்பூர வாழை ரகங்களே சிறந்தவை ஆகும். இந்த சாறு உடலில் கழிவை அகற்றும். நல்ல வலிமையுடன் இருக்க உதவும். சிறுநீரக கல்லை கரைக்கும்.

(2 / 6)

வாழைத்தண்டு: இளம் வாழைத்தண்டை நீளமாக சீவி, நீர்விட்டு அரைத்து வடிகட்டினால் சாறு தயார். இதற்கு பூவன், ஏலக்கி, கற்பூர வாழை ரகங்களே சிறந்தவை ஆகும். இந்த சாறு உடலில் கழிவை அகற்றும். நல்ல வலிமையுடன் இருக்க உதவும். சிறுநீரக கல்லை கரைக்கும்.(freepik)

முள்ளங்கி: பொதுவாகவே முள்ளங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். தேவையான கார, உப்புச்சத்துக்கள் இதில் எளிதாக கிடைக்கும். முள்ளங்கியை சிறு துண்டுகளாக்கி நீர் விட்டு அரைத்து வடிக்கட்டி சாறாக பயன்படுத்தலாம். இதன் சுவை நாவிற்கு பழகும் வரை சிறிது எலுமிச்சை சாறும் உடன் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நுண் தாதுக்கள் நிரம்பியுள்ளதால் வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் சாறாக பருகலாம்.

(3 / 6)

முள்ளங்கி: பொதுவாகவே முள்ளங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். தேவையான கார, உப்புச்சத்துக்கள் இதில் எளிதாக கிடைக்கும். முள்ளங்கியை சிறு துண்டுகளாக்கி நீர் விட்டு அரைத்து வடிக்கட்டி சாறாக பயன்படுத்தலாம். இதன் சுவை நாவிற்கு பழகும் வரை சிறிது எலுமிச்சை சாறும் உடன் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நுண் தாதுக்கள் நிரம்பியுள்ளதால் வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் சாறாக பருகலாம்.(freepik)

புடலங்காய்: புடலங்காயை உருவி, பிழிந்தால் கிடைக்கும் சாறை குடிக்கலாம். நல்ல செரிமான திறனை மேம்படுத்தும். தாது உப்பு சத்துக்களை அளிக்கும். இதை குடித்தால் பார்வை பளிச்சென தெரியும். சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தில் காரம், உப்பு அதிகரித்தால் சமநிலைப்படுத்தும். தோளுக்கு பளபளப்பு தரும். மாதவிடாய் தினத்திற்கு முன் பெண்கள் இதை குடித்தால் உதிரபோக்கு அளவுடன் இருக்கும்.

(4 / 6)

புடலங்காய்: புடலங்காயை உருவி, பிழிந்தால் கிடைக்கும் சாறை குடிக்கலாம். நல்ல செரிமான திறனை மேம்படுத்தும். தாது உப்பு சத்துக்களை அளிக்கும். இதை குடித்தால் பார்வை பளிச்சென தெரியும். சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தில் காரம், உப்பு அதிகரித்தால் சமநிலைப்படுத்தும். தோளுக்கு பளபளப்பு தரும். மாதவிடாய் தினத்திற்கு முன் பெண்கள் இதை குடித்தால் உதிரபோக்கு அளவுடன் இருக்கும்.(freepik)

அருகம்புல்: அருகம்புல்லை ஒரு கைப்பிடி எடுத்து, அதை பொடியாக வெட்டி, நீர்விட்டு அரைத்தால் சாறு தயார். நாவிரும்பும் சுவை இருக்காது. இதனால் குடிக்க சிரமமாக இருக்கும். கூடவே சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். பசியை அதிகரிக்கும். புத்துணர்ச்சி ஊட்டும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

(5 / 6)

அருகம்புல்: அருகம்புல்லை ஒரு கைப்பிடி எடுத்து, அதை பொடியாக வெட்டி, நீர்விட்டு அரைத்தால் சாறு தயார். நாவிரும்பும் சுவை இருக்காது. இதனால் குடிக்க சிரமமாக இருக்கும். கூடவே சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். பசியை அதிகரிக்கும். புத்துணர்ச்சி ஊட்டும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.(freepik)

பீட்ரூட் ஜூஸ்: அல்சர் பிரச்னை உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

(6 / 6)

பீட்ரூட் ஜூஸ்: அல்சர் பிரச்னை உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.(freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்