Alya Manasa: ‘பிரேக்கப்பால அழுது அழுது…அப்படியே ஓடி வந்து கட்டிப்பிடிச்சு’ - ஆல்யா மானசா
Alya Manasa: நாங்கள் பிரேக்கப்பில் இருந்த போதுதான் சீரியலில் நெருக்கமான காட்சிகளாக வைத்தார்கள். நாட்கள் நகர, நகர.. எனக்குள் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. - ஆல்யா மானசா
(1 / 6)
Alya Manasa: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ' ராஜா ராணி ' சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் இணைந்து அண்மையில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர். அப்போது ஆல்யா சஞ்சீவிற்கும், தனக்கும் நடந்த பிரேக் அப் குறித்து பேசினார்.
ஆல்யா பேசும் போது, ‘இப்போது எனக்கு பெரிதாக கோபம் வருவதில்லை; காரணம் என்னவென்றால், சஞ்சீவ் என்னிடம் எனக்கு பேபி போன்ற கோபபடாத ஆல்யாவைதான் மிகவும் பிடிக்கும். அதனால் நீ அப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டார். அதனால் நான் அப்படியே இருக்க பழகிவிட்டேன்.
(2 / 6)
முன்பெல்லாம் அப்படி இல்லை.
ஆனால், முன்பெல்லாம் அப்படி கிடையாது மிக அதிகமாக கோபப்படுவேன்; அந்த சமயத்தில்தான் எங்களுக்குள் பிரேக்கப் ஆனது; இந்த நிலையில், பிரேக்கப் ஆனவருடன் சீரியலில் எப்படி ஒன்றாக இணைந்து நடிக்க முடியும்.எப்படி நெருக்கமான காட்சிகளை அணுக முடியும் என்ற கேள்வி எனக்கு எழுந்தது.
இதனையடுத்துதான், நான் படக்குழுவிடம் சென்று, இந்த சீரியலில் ஒன்று அவர் நடிக்க வேண்டும், இல்லை நான் நடிக்க வேண்டும் நீங்களே முடிவு எடுங்கள் என்று கூறிவிட்டேன். பிரேக்கப் ஆன வாரம் முழுக்க, முழுக்க கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். சொல்லப்போனால் அழுது கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அதனால் வீசிங் வந்து, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டேன்.
(3 / 6)
பிரச்சினை வேறு
இதில், இன்னொரு பிரச்சினை வேறு, நாங்கள் பிரேக்கப்பில் இருந்த போதுதான் சீரியலில் நெருக்கமான காட்சிகளாக வைத்தார்கள். நாட்கள் நகர, நகர.. எனக்குள் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் நண்பர் மூலமாக சமரசம் பேச, அவரை தொடர்பு கொண்டு பேசி, சஞ்சீவை சந்திக்கச் சென்றேன். ஆனால் என்னை பார்த்தவுடன், இவர் ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்.
உண்மையில், நான் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினையை பேசி தீர்த்து, அதன் பின்னர் மீண்டும் இணையலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இவர் அதற்கு முன்பே என் மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஓடி வந்து கட்டி பிடித்துக் கொண்டார். அந்த பிரச்சினை வேறொரு நபரால் நடந்தது; அவரைப் பற்றி இங்கு சொல்ல முடியாது’ என்று பேசினார்.
(4 / 6)
சஞ்சீவ் பேட்டி
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சஞ்சீவ் பேசும் போது, ‘நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த பொழுது எங்களுக்குள் ஒரு பிரச்சினை வந்தது. அந்தப் பிரச்சினை ஒரு கட்டத்தில் பெரிய பிரளயமாக மாறியது; அதற்கு சில காரணங்கள் இருந்தன.
அந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இவர், ராஜா ராணி சீரியலில் நான் நடித்தால், அவர் நடிக்க மாட்டேன் என்று பட குழுவிடம் சொல்லிவிட்டார்; அத்துடன் அவர்களது வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து பெரிய பிரச்சினையும் செய்தார். இதனால், ராஜா ராணி சீரியலே நின்று போகும் நிலைமை உருவானது.
வீசிங் வந்தது
(5 / 6)
அந்த பிரச்சினையின் போது ஆலியா தொடர்ந்து அழுது கொண்டே இருந்த காரணத்தால், அவருக்கு வீசிங்கே வந்து விட்டது. அதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன. எனக்குத் தெரிந்த நபர்களே என்னுடைய கதாபாத்திரத்திற்கு என் கண்முன்னே ஆடிஷனுக்கு சென்றார்கள்.
(6 / 6)
இதையடுத்து ஒரு நாள் ஆலியாவே சமாதானமாகி, என்னுடைய வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும் என்று சொல்லி, போனால் போகட்டும் என்று நடிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் நாங்கள் முழுமையாக பிரேக்கப்பில் இருந்தோம்; தினமும் வருவோம்; வேலை முடித்து அவர் அவரது ரூமிற்கு செல்வார்; நான் என்னுடைய ரூமிற்கு செல்வேன்; இடையே பேசமாட்டோம்.
அந்த பிரச்சினை அப்படியே முடிந்தது; அதன் பின்னர் ஆலியாவே என்னுடைய நண்பர் மூலமாக என்னிடம் பேச வேண்டும் என்ற தூதுவிட்டு, மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டார்; அவரால் என்னை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை. இவையனைத்தும் ஒரு வாரத்தில் நடந்து முடிந்து விட்டது’ என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்