Bhavatharini: செங்கல் பட்டு சாமி கொடுத்த வரன்..மதுரை மாப்பிள்ளை.. - பவதாரிணி கல்யாண கதை!
“அங்கு சென்றால் நல்ல வரன் அமையும் என்று கேள்விபட்டோம். உடனே நாங்கள் இரண்டு பேரும் அந்த கோயிலுக்கு சென்றோம்.” - ஜெயந்தி!
(2 / 7)
பவதாரிணி கல்யாணம் சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசும் போது, “ பவதாரிணிக்காக பல இடங்களில் நானும், அவளின் அம்மாவும் மாப்பிள்ளை தேடினோம். ஆனால் வந்த வரன்கள் எதுவும் தாரிணிக்கு பிடிக்கவில்லை. இறுதியாக, செங்கல்பட்டு அருகே உள்ள பாலத்திற்கு கீழே ஒரு கன்னி கோயில் இருக்கிறது.
(3 / 7)
அங்கு சென்றால் நல்ல வரன் அமையும் என்று கேள்விபட்டோம். உடனே நாங்கள் இரண்டு பேரும் அந்த கோயிலுக்கு சென்றோம். அடுத்தவாரமே அவளுக்கு நல்ல வரன் அமைந்தது. மதுரையைச் சேர்ந்த சபரி என்பவருடன் தாரிணிக்கு திருமணம் முடிவானது.
(4 / 7)
ஜாதகம் பார்த்தோம். பொருத்தம் இருந்தது. பவதாரிணிக்காக வித்தியாசம், வித்தியாசமாக நகைகள் வாங்கினார்கள். அவளின் திருமணத்திற்காக ஒட்டு மொத்த குடும்பமே ஒன்று திரண்டு இருந்தது.
(5 / 7)
இளையராஜா மிகவும் சந்தோஷமாக இருந்தார். அப்படி நடந்தது தாரிணியின் கல்யாணம்” என்று பேசினார். பவதாரிணி கடந்த 2005 ஆம் ஆண்டு பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனின் மகன் சபரி ராஜை தான் காதலித்தே கரம் பிடித்ததாக செய்திகள் உள்ளன.
(6 / 7)
பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக ஏகப்பட்ட சிகிச்சைகளையும் மேற்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்