நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் வியக்க வைக்கும் சிறப்புகள் இதோ..!
- திருண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. அங்கு சிவபெருமானே அண்ணாமலையாராகக் காட்சி தருகிறார். அப்பேற்பட்ட திருவண்ணாமலை கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
- திருண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. அங்கு சிவபெருமானே அண்ணாமலையாராகக் காட்சி தருகிறார். அப்பேற்பட்ட திருவண்ணாமலை கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
(1 / 7)
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும் என்கிறார்கள்.
(2 / 7)
நகரின் மையப்பகுதியில் சிவன் நெருப்பாக நிற்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். இது 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்களும் ஆலயத்தின் உள்ளே 6 பிராகாரங்களும் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என்று அமைந்திருக்கிறது.
(3 / 7)
ஆலயத்தின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்று. பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
(4 / 7)
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்) இருக்கிறது. தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)உள்ளது. மேற்கில் பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்) என்று 9 கோபுரங்கள் உள்ளன.
(5 / 7)
திருவண்ணாமலையில் உள்ள மலையின் உயரம் 2,688 அடி (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
(6 / 7)
மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
(Freepik)மற்ற கேலரிக்கள்