Pizza Day 2024: ஒரு சாதாரண உணவு உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? - பீட்சா உருவான கதை!-all you need to know about pizza history and significance - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pizza Day 2024: ஒரு சாதாரண உணவு உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? - பீட்சா உருவான கதை!

Pizza Day 2024: ஒரு சாதாரண உணவு உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? - பீட்சா உருவான கதை!

Feb 09, 2024 10:57 AM IST Karthikeyan S
Feb 09, 2024 10:57 AM , IST

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி பீட்சா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதன் வரலாறு குறித்து பார்ப்போம்.

இன்றைக்கு பலரின் விருப்ப உணவாக மாறியிருக்கும் பீட்சா முதலில் எளிமையான உணவாகக் தான் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது.

(1 / 7)

8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் நேபிள்ஸின் தாயகமான தென்மேற்கு கம்பானியா பிராந்தியத்தில் பீட்சா முதன் முதலாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

(2 / 7)

ஏழை தொழிலாளர்களின் பசியாற்ற வந்த எளிய உணவாக முதன் முதலில் அறிமுகமானது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது. அந்த தட்டை ரொட்டிகளை வியாபாரிகள் பெரிய பெட்டிகளில் தூங்கி வந்து விற்பனை செய்தனர். தொழிலாளிகளின் காலை உணவை அவை பூர்த்தி செய்தன.

(3 / 7)

கடந்த 1800 பிற்கு பீட்சா பிரபலமாக மாறத் தொடங்கியது. அச்சமயம் இத்தாலிய ராணி மார்கெரிட்டா மற்றும் மன்னர் உம்பர்டோ தங்களின்  ராஜ்யத்தை சுற்றி வந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​விவசாய கிராமங்களில் தயாரிக்கப்படும் பீட்சாக்களை ராணி சுவைத்தார். அந்த சுவை பிடித்துப் போகவே சமையலர்களிடம் பீட்சா குறித்து கூறி தயாரிக்க சொன்னார்.

(4 / 7)

மென்மையான வெள்ளை சீஸ், தக்காளி ஆகியவற்றால் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பீட்சாவுக்கு மார்கெரிட்டா என அவரது பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

(5 / 7)

19 ஆம் நூற்றாண்டில், இத்தாலி முழுவதும் பீட்சா விருப்ப உணவாக உண்ணப்பட்டது. இத்தாலியர்கள் அமெரிக்காவிற்குச் செல்லத் தொடங்கியதும், பீட்சா மற்றொரு நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வேலை செய்யும் உணவகங்கள் கடைகளில் விற்கப்பட்டது. இப்படித்தான் ஒரு எளிய உணவு இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலமாக உண்ணப்படும் உணவாக மாறியது.

(6 / 7)

சமீபத்தில் 1001 வகையான சீஸ்களால் பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸை சேர்ந்த சமையல் கலைஞர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெலானிக்கோ 940 வகையான பிரெஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களையும் பயன்படுத்தி இந்த பீட்சாவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்