தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  All You Need To Know About Pamban Railway Bridge

Pamban Bridge History: வரலாறு மிக முக்கியம்..110-வது ஆண்டை நிறைவு செய்யும் பாம்பன் ரயில் பாலம்!

Feb 24, 2024 07:02 AM IST Karthikeyan S
Feb 24, 2024 07:02 AM , IST

  • பாம்பன் ரயில் பாலத்தில் முதன்முதலில் போக்குவரத்து தொடங்கிய நாள் இன்று (பிப்.24). இந்நாளில் இந்த பாலத்தின் சிறப்புகள் பற்றி நினைவு கூர்வோம்.

பாம்பன் ரயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கியது.

(1 / 9)

இந்தியாவில் கடலுக்கு குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது.

(2 / 9)

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2054 மீட்டர் நீளத்தில் 146 தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு 145 இரும்பு கிர்டர்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது.

(3 / 9)

அதிக உயரம் கொண்ட படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த வழியாக செல்லும் விதமாக பாலத்தின் நடுப்பகுதி மேல்நோக்கி திறந்து மூடும் 'ரோலிங் லிப்ட்' தொழில்நுட்பம் இந்த பாலத்தில் வடிவமைக்கப்பட்டது.

(4 / 9)

பாம்பன் ரயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது 1988ஆம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. 

(5 / 9)

1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் பாலத்தை புரட்டி போட்டதில் 124 துாண்கள் சேதமடைந்தன. தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புகழ்பெற்ற பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் தொழிலாளர்கள் 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர்.

(6 / 9)

கடந்த 2022 நவம்பர் 23-ல் பாம்பன் தூக்கு பாலத்தின் தூண்கள் பலமிழந்தது. இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பாம்பன் ரயில் பாலத்தையொட்டி 2.05 கி.மீ தூரத்துக்கு நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.  

(7 / 9)

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் (பிப்.24) 110 ஆண்டுகளாகிறது. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். 

(8 / 9)

இந்தியாவில் கடல் மீது அமைந்துள்ள நீளமான பாலம் என்ற சிறப்புமிக்க பாம்பன் பழைய ரயில் பாலம் 110 வது வயதை கடக்கிறது. ராமேஸ்வரம் தீவின் நினைவுச் சின்னம் என வர்ணிக்கும் வகையில் உள்ள இந்த பாலத்திற்கு விரைவில் பிரியா விடை கொடுக்கப்பட உள்ளது.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்