Deworming Day 2024: 'குழந்தைகளின் உடல் நலம் அவசியம்'..இன்று குடல் புழுக்களை விரட்டும் தினம்!
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் நோக்கம் மற்றும் குறிக்கோள் பற்றி தெரிந்துகொள்வோம்.
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் நோக்கம் மற்றும் குறிக்கோள் பற்றி தெரிந்துகொள்வோம்.
(1 / 7)
குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடற்புழு நீக்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
(2 / 7)
காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவாமல் சாப்பிடுதல், கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல், சுத்தம் பேணாமல் இருத்தல் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு குடற்புழுக்கள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
(3 / 7)
குறிப்பாக 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடற்புழு நோய் தாக்கி ரத்தசோகை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பரவலை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க ( National Deworming Day) தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
(4 / 7)
இந்நாள்களில், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளின் வாயிலாக, வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அழிக்கும் 'அல்பெண்டசோல்' மாத்திரைகள் அரசால் வழங்கப்படுகின்றன.
(5 / 7)
மண்ணின் வழியாக பரவும் குடல்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக 'அல்பெண்டசோல்' என்னும் மாத்திரைகளை உட்கொள்ள செய்து, இந்த நோயின் பாதிப்புகளை தடுப்பதே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.
இந்த மாத்திரைகள் 1 முதல் 19 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகிய இரு பாலர்களுக்கும் கொடுக்கப்பட்டு உட்கொள்ளச் செய்யப்படுகிறது.
(6 / 7)
குறிப்பாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது இந்நாளில் வழக்கம்.
மற்ற கேலரிக்கள்