Ajwain Plant: வயிறு தொடர்பான பல பிரச்னைகளுக்கு அருமருந்து.. ஓமம் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?
- Ajwain Plant: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓமம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு பவ்வேறு நன்மைகளை தருகிறது. இதை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக உங்கள் வீட்டு சமையலறையிலேயே நடவு செய்து வளர்க்கலாம்
- Ajwain Plant: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓமம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு பவ்வேறு நன்மைகளை தருகிறது. இதை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக உங்கள் வீட்டு சமையலறையிலேயே நடவு செய்து வளர்க்கலாம்
(1 / 7)
சமையலறையில் இருக்கும் முக்கியமான மசாலா பொருள்களில் ஒன்றாக ஓமம் இருந்து வருகிறது. வயிறு சம்மந்தமான பிரச்னையை குணப்படுத்தும் அரு மருந்தாக ஓமம் உள்ளது. ஓமம் விதைகள் மட்டுமல்ல, அதன் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமத்தை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக உங்கள் வீட்டின் சமையல் அறையிலேயே செடியாக வளர்த்து பயன்படுத்தலாம்
(2 / 7)
ஓமம் செடியை வீட்டில் நடுவதற்கு நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், இந்த செடியை மற்ற மரங்களை போல அல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக பராமரிக்க வேண்டும்
(pixabay )(3 / 7)
முதலில், ஒரு வட்டமான பானையை எடுத்து அதில் சிறிது உரமிட்ட மண்ணைப் போட வேண்டும். பின்னர் கடைகளில் வாங்கியிருக்கும் ஓமத்தை சிறது அளவை, ஆழமான துளையிட்டு அதில் வைக்கவும். ஓமம் விதைகள் மண்ணில் நன்றாக ஊடுருவும் தன்மை கொண்டது
(pixabay )(4 / 7)
முதலில், ஒரு வட்டமான பானையை எடுத்து அதில் சிறிது உரமிட்ட மண்ணைப் போட வேண்டும். பின்னர் கடைகளில் வாங்கியிருக்கும் ஓமத்தை சிறது அளவை, ஆழமான துளையிட்டு அதில் வைக்கவும். ஓமம் விதைகள் மண்ணில் நன்றாக ஊடுருவும் தன்மை கொண்டது.
(5 / 7)
ஓமத்தை விதைத்த பிறகு, பானையை ஈரப்பதமான சூழலில் வைத்து, விதைகள் முளைக்கும் வரை பானையை பிளாஸ்டிக்கால் மூடி வைக்கவும். ஓமம் நன்கு துளிர் விடுவதற்கு முன் தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம், மாறாக லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளவும்
(6 / 7)
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஓமம் விதைகள் முளைப்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள், செடி மண்ணிலிருந்து வெளிவரும். இன்னும் சில நாள்கள் அப்படியே வைத்திருந்த பிறகு, ஓமம் செடியில் இலைகள் முளைக்க தொடங்கும்
(7 / 7)
ஓமத்தை வைத்து பக்கோடா தயார் செய்து சாப்பிடலாம். ஓமம் பக்கோட செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்து வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின் ஓமம் இலைகளை கலவையில் நன்கு கலந்து, அந்த கலவையை சிறிய துண்டுகளாக ஆக்கி எண்ணெயில் வறுக்கவும், சுவை மிகுந்து அனைவரும் விரும் சாப்பிடும் விதமாக ஓமம் பக்கோடா தயாராகி விடும்
(HT File Photo)மற்ற கேலரிக்கள்