Aadvik Ajith: ஓட்டப்பந்தயத்தில் முன்னணி இடம்பிடித்த அஜித்தின் அன்பு மகன் ஆத்விக்.. வைரலாகும் ஷாலினியின் பதிவு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aadvik Ajith: ஓட்டப்பந்தயத்தில் முன்னணி இடம்பிடித்த அஜித்தின் அன்பு மகன் ஆத்விக்.. வைரலாகும் ஷாலினியின் பதிவு!

Aadvik Ajith: ஓட்டப்பந்தயத்தில் முன்னணி இடம்பிடித்த அஜித்தின் அன்பு மகன் ஆத்விக்.. வைரலாகும் ஷாலினியின் பதிவு!

Jan 30, 2025 05:25 PM IST Marimuthu M
Jan 30, 2025 05:25 PM , IST

  • Aadvik Ajith: ஓட்டப்பந்தயத்தில் முன்னணி இடம்பிடித்த அஜித்தின் அன்பு மகன் ஆத்விக் குறித்து அறிவோம். வைரலாகும் ஷாலினியின் பதிவு குறித்துப் பார்ப்போம். 

அஜித் குமார் எஃப் 1 கார் ரேஸில் இறங்கி, இருப்பது போலவே, அவரது ஒன்பது வயது மகன் ஆத்விக்கும் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. ஆத்விக் அஜித், தான் சென்னையில் படிக்கும் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார். 

(1 / 6)

அஜித் குமார் எஃப் 1 கார் ரேஸில் இறங்கி, இருப்பது போலவே, அவரது ஒன்பது வயது மகன் ஆத்விக்கும் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. 

ஆத்விக் அஜித், தான் சென்னையில் படிக்கும் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார். 

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், ஜனவரி 29ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் ஆத்விக், அவரது பள்ளியில் தடகளப் பாதையில் தனது போட்டியாளர்களைவிட மிகவும் முன்னால் ஓடும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். அவர் தனது தலைப்பில் ஒரு சில எமோஜிகளை வெளியிட்டிருந்தார். அதில், பிரகாசம், கொண்டாட்டம் என எழுதி இதய எமோஜியைப் பகிர்ந்து இருந்தார். ஓட்டப்பந்தயத்தில் தனது மகன் வெற்றி பெறும்போது அவர் கூச்சலிடுவதையும் பார்க்க முடிகிறது. 

(2 / 6)

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், ஜனவரி 29ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் ஆத்விக், அவரது பள்ளியில் தடகளப் பாதையில் தனது போட்டியாளர்களைவிட மிகவும் முன்னால் ஓடும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். 

அவர் தனது தலைப்பில் ஒரு சில எமோஜிகளை வெளியிட்டிருந்தார். அதில், பிரகாசம், கொண்டாட்டம் என எழுதி இதய எமோஜியைப் பகிர்ந்து இருந்தார். ஓட்டப்பந்தயத்தில் தனது மகன் வெற்றி பெறும்போது அவர் கூச்சலிடுவதையும் பார்க்க முடிகிறது. 

ஆத்விக்கின் தடகள திறன்களால் இணையத்தில் பேசுபொருள் ஆனார். அது அவரது தந்தை அஜித்துடன் ஒப்பிடப்பட்டார்.இது தொடர்பாக  இன்ஸ்டாகிராம் பயனர், "சூப்பர் ஸ்டார்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "குட்டி ஏ.கே’’ என எழுதி, சிவப்பு இதயம் மற்றும் இதய கண்கள் ஈமோஜிகளைக் கொண்டிருக்கிறது" என்று எழுதினார்.

(3 / 6)

ஆத்விக்கின் தடகள திறன்களால் இணையத்தில் பேசுபொருள் ஆனார். அது அவரது தந்தை அஜித்துடன் ஒப்பிடப்பட்டார்.

இது தொடர்பாக  இன்ஸ்டாகிராம் பயனர், "சூப்பர் ஸ்டார்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "குட்டி ஏ.கே’’ என எழுதி, சிவப்பு இதயம் மற்றும் இதய கண்கள் ஈமோஜிகளைக் கொண்டிருக்கிறது" என்று எழுதினார்.

இன்னொரு நெட்டிசன், ’’டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை! வாழ்த்துக்கள் சாம்பியன்!" என்று கமெண்ட் செய்துள்ளார். "அஜித் சார் ரேஸ் டிராக்கை ஜெயித்தார். இப்போது அவரோட மகன் ஆத்விக் அத்லெடிக் ஃபீல்டில் ஆட்சி பண்றார். பந்தயம் அவர்களின் இரத்தத்தில் ஓடுகிறது என்று நினைக்கிறேன். வேகத்தின் உண்மையான ராஜாக்கள்!" என்று ஒரு இணையப் பயனர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

(4 / 6)

இன்னொரு நெட்டிசன், ’’டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை! வாழ்த்துக்கள் சாம்பியன்!" என்று கமெண்ட் செய்துள்ளார். 

"அஜித் சார் ரேஸ் டிராக்கை ஜெயித்தார். இப்போது அவரோட மகன் ஆத்விக் அத்லெடிக் ஃபீல்டில் ஆட்சி பண்றார். பந்தயம் அவர்களின் இரத்தத்தில் ஓடுகிறது என்று நினைக்கிறேன். வேகத்தின் உண்மையான ராஜாக்கள்!" என்று ஒரு இணையப் பயனர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 பல இணையப் பயனர் அதை பொருத்தமாக, "தந்தையைப் போல், மகன்" என்று பொருத்தமாக எழுதியிருக்கிறார். அதேபோல், டிஸ்னியின் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட் அனிமேஷன் சாகசப் படமான தி லயன் கிங்கிலிருந்து முஃபாசா மற்றும் அவரது குட்டி சிம்பாவின் GIF ஐ, ஒரு இணையப் பயனர் பகிர்ந்து இருந்தார்.

(5 / 6)

 பல இணையப் பயனர் அதை பொருத்தமாக, "தந்தையைப் போல், மகன்" என்று பொருத்தமாக எழுதியிருக்கிறார். அதேபோல், டிஸ்னியின் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட் அனிமேஷன் சாகசப் படமான தி லயன் கிங்கிலிருந்து முஃபாசா மற்றும் அவரது குட்டி சிம்பாவின் GIF ஐ, ஒரு இணையப் பயனர் பகிர்ந்து இருந்தார்.

நடிகர் அஜித்தும் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆர்வலர். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆர்வமும் வரலாறும் உண்டு. நடிகர் அஜித் ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் கூட போட்டியிட்டுள்ளார். அஜித் மோட்டார் சைக்கிள் பந்தயத்துடன் தனது பந்தய வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்து, தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். தற்போது, அஜித் குமார் ரேஸிங் என்ற பந்தய அணியின் உரிமையாளராகவும் நடிகர் அஜித் குமார் இருக்கின்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது அணியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(6 / 6)

நடிகர் அஜித்தும் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆர்வலர். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆர்வமும் வரலாறும் உண்டு. 

நடிகர் அஜித் ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் கூட போட்டியிட்டுள்ளார். அஜித் மோட்டார் சைக்கிள் பந்தயத்துடன் தனது பந்தய வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்து, தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். தற்போது, அஜித் குமார் ரேஸிங் என்ற பந்தய அணியின் உரிமையாளராகவும் நடிகர் அஜித் குமார் இருக்கின்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது அணியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கேலரிக்கள்