Airtel in-flight roaming plan: 30 ஆயிரம் உயரத்தில் விமானத்தில் பறக்கும்போது இண்டர்நெட் சேவை! ஏர்டெல் அதிரடி திட்டம்
பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் இன்-பிளைட் ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விமானத்தில் பறந்தவாறே எவ்வித இடையூறுமின்ற இண்டர்நெட், எஸ்எம்எஸ் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்
(1 / 6)
இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் ஏர்டெல் இன்-பிளைட் ரோமிங் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் கூடுதல் தொகை எதுவும் செலுத்தாமல் விமான பயணத்தின்போது இணைப்பில் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு திட்டம் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பு, வாய்ஸ் கால்கள் பெறலாம்(Unsplash)
(2 / 6)
ஏர்டெல் இன்-பிளைட் ரோமிங் பேக்குகள் ரூ. 195 முதல் தொடங்குகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு விமான பயணத்தில் ரோமிங்கை ஒருங்கிணைக்கிறது(Unsplash)
(3 / 6)
வாடிக்கையாளர்களுக்கு 30 ஆயிரம் அடி உயரத்திலும் தடையற்ற இணைப்பை வழங்குவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் அமித் திரிபாதி(Unsplash)
(4 / 6)
ஏர்டெல் இன்-ஃப்ளைட் திட்டங்களில் 250எம்பி முதல் 1ஜிபி வரையிலான டேட்டா பேக்குகள், ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவை 24 மணிநேரத்துக்கு செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் முழு விமான பயண நேரத்திலும் காலத்தின்போதும் பிரவசிங், கால் அழைப்பு, எஸ்எம்எஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம்(Unsplash)
(5 / 6)
ஏரோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சர்வதேச வழித்தடங்களில் 19 விமான சேவைகளில் சிறந்த இணைப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பயண அனுபவம் சிறப்பாக அமைகிறது(Unsplash)
(6 / 6)
வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஆதரவளிக்க, ஏர்டெல் அதன் தொடர்பு மையம் மற்றும் பிரத்யேக வாட்ஸ்அப் எண் மூலம் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டை நிர்வகித்து கொள்வதோடு, ஏர்டெல் தாங்க்ஸ் ஆப் மூலம் நிகழ்நேர பில்லிங் விவரங்களை வசதியாக அணுகலாம்(Unsplash)
மற்ற கேலரிக்கள்