Air Pollution : என்ன காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறதா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!
- Air Pollution : காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறது என இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.
- Air Pollution : காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறது என இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.
(1 / 9)
Air Pollution : காற்று மாசுபாடு PM2.5 மைக்ரான் துகள்களின் அளவு அதிகமானால், சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகமாவது இந்திய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(2 / 9)
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் (PM2.5 மைக்ரான் அளவு அதிகம்) சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகம் ஏற்படுவது இந்திய ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
(3 / 9)
PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகம் இருப்பதால், நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் (ஆஸ்துமா உட்பட), மாரடைப்பு, மூளை அல்லது நரம்பு மண்டல பாதிப்பு (Stroke), புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
(4 / 9)
ஏற்கனவே, அமெரிக்க, ஐரோப்பிய 13 ஆய்வுகளில், வழக்கமான அளவை விட 10 மைக்ரோகிராம்/கன மீட்டர் PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகமானால், சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவது 8 – 10 சதவீதம் அதிகமாவது கண்டறியப்பட்டது. (ஆண்களைக் காட்டிலும், பெண்கள் மத்தியில் பாதிப்பு அதிகம்)
(5 / 9)
சீனாவில், 40,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் வழக்கமான சர்க்கரை அளவை விட, அதிக சர்க்கரை அளவு இருப்பது உறுதிபடுத்தப்பட்டதோடு, அவர்கள் மத்தியில், அதன் காரணமாக, இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.
(6 / 9)
சமீபத்தில், JAPI-Journal of Association pf Physicians of India பத்திரிக்கையில், "Air pollution : A new cause of Type-2 Diadetes?" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் மோகன், "PM 2.5 மைக்ரான் துகள்கள் ஹார்மோன்களை பாதிக்கும் தன்மை கொண்டவை - Endocrine Disruptors - என்பதை உறுதிபடுத்தியதோடு, இன்சுலின் சுரப்பதை அவை குறைக்கின்றன என்றும், இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மையை (Insulin Resistance) உருவாக்குகின்றன என்பதையும் ஆதாரங்களுடன் கண்டறிந்து எழுதினார்.
(7 / 9)
2020ல் Greenpeace, India மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 25,000 பேரும், டெல்லியில், 54,000 பேரும், சென்னையில் 11,000 பேரும் ஆண்டுக்கு PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகரிப்பால் முன்கூட்டியே இறந்தது தெரியவந்துள்ளது.
(8 / 9)
உலக சுகாதார நிறுவனமோ, அதன் அளவு 15-25 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்றும், அமெரிக்க சூழல் பாதுகாப்பு நிறுவனம்-EPA-9 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என சமீபத்திய ஆய்வுகளின் படி நிர்ணயித்துள்ளது.
மற்ற கேலரிக்கள்