அகமதாபாத்: 242 பேருடன் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து! கோர காட்சிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அகமதாபாத்: 242 பேருடன் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து! கோர காட்சிகள்

அகமதாபாத்: 242 பேருடன் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து! கோர காட்சிகள்

Published Jun 12, 2025 04:29 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 12, 2025 04:29 PM IST

242 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன், லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் (AI171) டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் திடீரென உயரத்தை வேகமாக இழந்தது, அப்போது காற்றில் அடர்த்தியான கரும்புகை சுழன்று எழும்பிய நிலையில், நெருப்புப் பற்றிக்கொண்டு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்த கட்டிடங்களில் மோதி தீ பிடித்தது

(1 / 7)

(PTI)

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

(2 / 7)

(via REUTERS)

232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் விபத்துக்குள்ளானது.

(3 / 7)

அகமதாபாத்திலிருந்து கேட்விக் சென்ற நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டவர் இருந்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

(4 / 7)

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேபோல் விமான விபத்து ஏற்பட்ட மேகனி நகரில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

(5 / 7)

விமான விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் பேசி, அகமதாபாத்துக்கு சென்று, துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

(6 / 7)

விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து வந்த காட்சிகள், புகைப்படங்களில் சிதைந்த உலோகம் இடிபாடுகளின் மீது விழுந்திருப்பதும், சிக்கிய கம்பிகளின் சத்தமும், கருகிய எச்சங்களிலிருந்து புகை எழுவதும் தெரிகின்றன

(7 / 7)

கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்