தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  After 148 Years Saturn-venus-mars Joins Aquarius And These Are The Lucky Signs

Lucky Signs: 148ஆண்டுகளுக்குப் பின் கும்பத்தில் சேரும் சனி - சுக்கிரன் -செவ்வாய்: லக் ராசிகள் இவைதான்!

Mar 19, 2024 05:04 PM IST Marimuthu M
Mar 19, 2024 05:04 PM , IST

  • கும்ப ராசியில் சனி பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவானின் சேர்க்கையால் வெல்லப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

செந்நிறமும் கழுத்தில் சிகப்பு மாலையும் அணிந்து இருக்கும் செவ்வாய் பகவான், அங்காரகன் என அழைக்கப்படுகிறார். இவர் தோஷங்களை நீக்குவதில் வல்லவர். சுக்கிர பகவான் ஆடம்பரம், அன்பு, செல்வத்தைத் தரக் கூடியவர். இப்படி இருக்கும் நிலையில் நீதிமானான சனி பகவான்,  கும்பராசியில் ஆளுகைச் செலுத்தி வருகிறார். இது இவ்வாறு இருக்கும் நிலையில் செவ்வாய் மார்ச் மாதம் 15ஆம் தேதி கும்பத்தில் சேர்ந்தார். முன்பே, சுக்கிர பகவானும் கும்பத்தில் சஞ்சரித்து வந்திருக்கிறார். 

(1 / 6)

இதனால், மூன்று கிரகங்கள் கும்பராசியில் ஒன்று சேர்ந்து சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் 148 ஆண்டுகளுக்குப் பின், புதிய யோகத்தை உண்டு செய்கின்றன. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் வாழ்வில் செழிப்பினை உண்டாக்குகின்றன. 

(2 / 6)

மேஷ ராசி: மேஷ ராசியினருக்கு சுக்கிர பகவான், சனி பகவான், செவ்வாய் பகவான் ஆகிய மூன்றுகிரகங்களும் கும்பராசியில் ஒன்று சேர்வதால் கடந்த காலத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். துன்பங்கள் மறைந்து ஓடும். மேஷ ராசியினருக்கு, மூன்று ராசியினரின் சேர்க்கையால், முடிந்துபோனது என்று நினைத்த உறவுகள் மீண்டும் சேர்வர். பகைவராக இருந்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். உங்களிடம் கடன்வாங்கி உங்களை ஏமாற்றிவிட்டு சொகுசு வாழ்க்கை வந்தவர்களுக்கு, மனசு குத்தி, உங்களிடம் பெற்ற கடனை வந்துகொடுப்பார்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். கடவுளுக்காகத் திருப்பணி செய்வீர்கள். தொழில்முனைவோர்களுக்கு நன்மை கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப்பெற்று, அதன்மூலம் ஆதாயத்தைப் பெறுவீர்கள். இத்தனை  நாட்களாகப் பணியிடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வரும் நாட்களில் நல்ல ஊதிய உயர்வைப் பெறுவீர்கள் .மொத்தத்தில் நீங்கள் தொட்ட பணிகள் அனைத்தும் சட்டு சட்டென்று முடியும். பணமாக மாறும். பொருளாதாரத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். சைடு பிசினஸையும் செய்வீர்கள்.

(3 / 6)

தனுசு ராசி: தனுசு ராசியினருக்கு சுக்கிர பகவான், சனி பகவான், செவ்வாய் பகவான் ஆகிய மூன்றுகிரகங்களும் கும்பராசியில் ஒன்று சேர்வதால் கடந்த காலத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும்.துன்பங்கள் பறந்தோடும். கம்பீரமும் விவேகமும் பெறுவீர்கள். அயற்சியில் இருந்து நீங்கி உத்வேகம் அடைவீர்கள். பணியில் இருந்த எதிரிகளின் ஆதிக்கம் வீழும்.  உங்களை அவமானப்படுத்தியவர்கள், உங்களது நல்ல குணத்தை அறிந்துகொள்வார்கள். சொந்தத்தில் இழந்த நல்ல பெயரைப் பெறுவீர்கள்.  வெளியூர் சென்றுபுதிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பீர்கள். இத்தனை நாட்களாக வாடகை மற்றும் ஒத்திவீட்டில் இருப்பவர்கள், இந்த காலத்தில் வீட்டடி மனையினையாவது வாங்கிவிடுவீர்கள். தாத்தா மற்றும் பாட்டிக்கள் உங்களது  நற்செயலுக்கு ஆதரவு நல்குவார்கள். கண்ணுக்கு நேராகவும் மறைமுகமாகவும் வரும் அத்தனை சிக்கல்களையும் வென்று வாழ்வில் வசந்தத்தைப் பெறுவீர்கள்.  

(4 / 6)

கன்னி ராசி: கன்னி ராசியினருக்கு சுக்கிர பகவான், சனி பகவான், செவ்வாய் பகவான் ஆகிய மூன்றுகிரகங்களும் கும்பராசியில் ஒன்று சேர்வதால் கடந்த காலத்தில் இருந்த துன்பங்கள் நீங்கும். துயரங்கள் பறந்தோடும். இத்தனை நாட்களாக நீங்கள் கட்டமுடியாமல் தவித்த வீட்டுக்கடன், கல்விக் கடன், நகைக் கடன் ஆகிய அத்தனை கடன்களில் இருந்தும் மீளும் வகையில் வருவாய் கிடைக்கும். தினமும் வட்டிக்கு வாங்கி தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் களைகட்டும், நிகர லாபம் உங்களை விரைவில் ஒரு கடைக்கு முதலாளி ஆக்கப்போகிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த மூட்டு வலி, முதுகுவலி, கால் வலி ஆகியவை இந்த காலகட்டத்தில் நிவர்த்தியாகும். அயல்நாட்டில் அயல்மாநிலங்களில் உயர் படிப்பு படித்து, புது முன்னேற்றத்தைப் பெறப்போகிறீர்கள். இத்தனை நாட்களாக இல்லாமல் இருந்த ஊக்கமும் தற்சார்பு மனநிலையும் அதிகரிக்கும். இத்தனை நாட்களாக உங்களை வெறுத்து ஒதுக்கிய சொந்தங்கள், உங்களைத் தேடி வந்து பேசுவார்கள்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்