India First Sun Mission Aditya L1: இந்தியாவின் முதல் சூரிய பயணம்! ஆதித்யா எல்1 தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
- சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல் 1ஐ அதன் இலக்கு சுற்றுப்பாதையில் லாக்ரேஞ்ச் பாயிண்ட்-1 இல் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது இந்திய விண்வெலை ஆய்வு மையமான இஸ்ரோ
- சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல் 1ஐ அதன் இலக்கு சுற்றுப்பாதையில் லாக்ரேஞ்ச் பாயிண்ட்-1 இல் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது இந்திய விண்வெலை ஆய்வு மையமான இஸ்ரோ
(1 / 6)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் சூரிய பயணமான ஆதித்யா எல்1 உள்ளது. இந்த விண்கலம் அதன் இலக்கை அடைவதற்கான இறுதி பயணத்தை வெற்றிகரமாக முடித்து, அதன் சுற்றுப்பாதையில் இன்று செலுத்தப்பட்டது
(2 / 6)
"ஜனவரி 6 மாலை 4 மணிக்கு ஆதித்யா எல்1, அதன் L1 புள்ளியை அடையும். அதை அங்கேயே வைத்திருப்பதற்கான இறுதி பணிகள் செய்யப்படும்" என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் செய்தியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
(3 / 6)
இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா எல் 1 இலக்கை அடைந்துள்ளது. இது மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட இடைவிடாத அர்ப்பணிப்புக்கு சான்றாக உள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
(4 / 6)
ஆதித்யா-எல்1 அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள், எல்1ஐ அடைந்ததும் மற்றொரு முக்கியமான பணியை மேற்கொள்ளும்(ISRO)
(5 / 6)
ஆதித்யா L1 இல் இடம்பிடித்திருக்கும் ஏழு பேலோடுகள், நாட்டிலுள்ள பல்வேறு ஆய்வகங்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன
மற்ற கேலரிக்கள்