Adani Share Value Drop: தேர்தல் முடிவுகள் எதிரொலி! அதானி நிறுவன பங்குகள் ரூ. 2.48 லட்சம் கோடி வரை சரிவு
- தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் ஒரு பக்கம் விர்ரென உயர்ந்து வர, இந்திய சந்தையில் பணக்கார தொழிலதிபரான அதானியின் பங்குகள் சுமார் ரூ. 2.48 லட்சம் கோடி மதிப்பில் சரிந்துள்ளது.
- தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் ஒரு பக்கம் விர்ரென உயர்ந்து வர, இந்திய சந்தையில் பணக்கார தொழிலதிபரான அதானியின் பங்குகள் சுமார் ரூ. 2.48 லட்சம் கோடி மதிப்பில் சரிந்துள்ளது.
(1 / 4)
இன்று அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 18.55 சதவீதம் சரிந்து 912.05 ரூபாயாக உள்ளது. முன்னதாக நேற்று சந்தை வர்த்தகத்தின் முடிவில் அதானி டோட்டல் காஸ் பங்கு விலை 1119.85 ஆக இருந்தது. இதற்கிடையில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்கு விலை சுமார் 18 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கின் விலை 1664.95 ரூபாயாக சரிந்தது
(Bloomberg)(2 / 4)
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்து லோயர் சர்க்யூட்டை தொட்டுள்ளது . இதனால் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 3280.85 ரூபாய் என சரிந்தது. இதற்கிடையில், அதானி துறைமுகமும் லோயர் சர்க்யூட்டை தொட்டு 1428.9இல் நின்றது. மொத்தத்தில் அனைத்து அதானி நிறுவனங்களின் பங்கு விலை ரூபாயில் சரிந்து அதன் பங்கு மதிப்பு ரூ. 19.42 லட்சம் கோடியில் இருந்து ரூ. 16.94 லட்சம் கோடியாக சரிந்தது
(Bloomberg)(3 / 4)
வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி பவர் பங்குகள் முறையே 14.18 சதவீதம் மற்றும் 13.6 சதவீதம் சரிந்தன. இதனிடையே அதானிக்கு சொந்தமான என்டிடிவியின் பங்கு விலை 13 சதவீதம் சரிந்தது. அதேசமயம், அதானி வில்மர் மற்றும் அம்புஜா சிமெண்ட் பங்குகள் 10 சதவீதமும், ஏசிசி சிமென்ட் 9 சதவீதமும் சரிந்தன
(REUTERS)மற்ற கேலரிக்கள்