தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar: ஜாபர் சாதிக் வழக்கு.. அமீர் மீது சவுக்கு சங்கருக்கு அப்படி என்ன வன்மம்? - காரணம் உடைத்த தயாரிப்பாளர்!

Savukku Shankar: ஜாபர் சாதிக் வழக்கு.. அமீர் மீது சவுக்கு சங்கருக்கு அப்படி என்ன வன்மம்? - காரணம் உடைத்த தயாரிப்பாளர்!

May 17, 2024 08:31 AM IST Kalyani Pandiyan S
May 17, 2024 08:31 AM , IST

அமீர் மீது சவுக்கு சங்கர் காழ்ப்புணர்ச்சியை காட்ட என்ன காரணம் என்பது குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதம் பவா பேசி இருக்கிறார். 

Savukku Shankar: ஜாபர் சாதிக் வழக்கு.. அமீர் மீது சவுக்கு சங்கருக்கு அப்படி என்ன வன்மம்? - காரணம் உடைத்த தயாரிப்பாளர்!

(1 / 6)

அமீர் மீது சவுக்கு சங்கர் காழ்ப்புணர்ச்சியை காட்ட என்ன காரணம் என்பது குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதம் பவா, ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ சவுக்கு சங்கர் என்னுடைய நெருங்கிய நண்பராகத்தான் இருந்தார். அவருடைய பேட்டிகளை எல்லாம் நான் பார்த்தேன். மக்கள் சார்பாக நின்று, அவர் அவர்களின் பிரச்சினைகளை முன் வைக்கும் விதம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  

(2 / 6)

சவுக்கு சங்கருக்கு உதவி வேண்டுமா? என்னுடைய அலுவலகத்திற்கும் அவர் அடிக்கடி வர ஆரம்பித்தார். நாங்கள் இரண்டு பேரும் நிறைய விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருப்போம். இந்த நிலையில்தான் அவர் ஒரு வழக்கு தொடர்பாக ஜெயிலுக்கு சென்றார். அப்போது யார் அவர் பக்கம் நின்றார்களோ இல்லையோ, நான் அவரின் சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து, சவுக்கு சங்கருக்கு ஏதும் உதவி செய்ய வேண்டும் என்றால் என்னை அணுகுங்கள். மக்கள் பிரச்சினையை பேசும் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினேன். மேக்கப் செய்து விட்டேன்அவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பொழுது, அவரும், நானும் மீடியா ஒன்றை ஆரம்பிப்பதாக இருந்தோம். ஒரு வாரத்தில் அவர் நான் வேறு ஒன்றை மேக்கப் செய்து விட்டேன் என்று கூறி கிளம்பி விட்டார்.  இதையடுத்துதான் அவர் ஒரு சார்பை எடுக்க ஆரம்பித்தார். மக்கள் பிரச்சினைகளை பேசும்பொழுது கட்சி சார்பு எடுக்கக் கூடாது. ஆனால் அவர் எடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால், அந்த கட்சியிலும் எல்லோரும் யோக்கியவான்கள் கிடையாது.அவர் இப்படி ஒரு சார்பாக போன உடன், அவரது நிலைப்பாடானது முற்றிலும் மாறிவிட்டது. இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் சம்பந்தமான பிரச்சினை உருவெடுத்தது. அப்போது ஆதம் பவாதான் அமீருக்கு ஜாபர் சாதிக்கை அறிமுகப்படுத்தி வைத்தார் என்று வீடியோ ஒன்றில் கூறிவிட்டார்.   

(3 / 6)

அவர் அப்படி கூறியதில் இருந்து எனக்கு கடன் கொடுக்கிறேன் என்று கூறியவர்கள், கடன் கொடுக்க மறுத்தார்கள். கடன் கொடுத்தவர்களும், பணத்தை திருப்பி கேட்க முன் வந்து விட்டார்கள். இதனால் நான் பெரும் அவஸ்தைக்கு உள்ளானேன். அமீர் திமுக சார்பாக தொடர்ந்து பேசி வருகிறார் .   

(4 / 6)

அமீரின் மீது சவுக்கிற்கு என்ன காழ்புணர்ச்சி என்று தெரியவில்லை. அவர் திமுக சார்பாக பேசி வருவதால், அதை உடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால்தான் அவர் அப்படி பேச ஆரம்பித்தார்.   

(5 / 6)

அரசியல் என்று வந்துவிட்டால் அங்கு நேர்மை அடிபட்டு விடும். நீங்கள் தற்போது பார்த்தீர்கள் என்றால், முன்பு சவுக்கு சங்கர் ஜெயிலுக்கு செல்லும் பொழுது, சுற்றி முற்றிலும் அவருக்கு அவ்வளவு ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அவருக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. அவர் வீடியோக்களில் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். இதுவே அம்மாவின் ஆட்சி காலத்தில் இப்படி எல்லாம் பேச முடியுமா?.. கடைசியாக அவர் பெண் காவலர்களை பற்றி பேசியதெல்லாம் மிக மிக தவறான விஷயமாகும். அதனால் தான் தற்போது அவரது முகம் வீங்கி போய் இருக்கிறது. பாவம் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்