தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Who Were Rumored To Be Dating Cricketers

Cricketers and Actress Dating: டேட்டிங், காதல்..! அபிமான கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள்

Mar 30, 2024 04:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 30, 2024 04:00 AM , IST

  • நடிகைகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான டேட்டிங், காதல் என்ற வதந்திகள் காலங்காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டார் கிரிக்கெட் வீரர்களுடன், பிரபல ஹீரோயின்களின் பெயர்களும் இணைக்கப்பட்ட பல்வேறு வதந்திகள் உலா வந்துள்ளன, அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களும், நடிகைகளும் இதோ 

(1 / 11)

யுவராஜ் சிங் - ப்ரீத்தி ஜிந்தா: ஐபிஎல் ஆரம்ப நாட்களில், யுவராஜ் சிங்கும் ப்ரீத்தியும் டேட்டிங் செய்ததாக செய்திகள் வந்தன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக இருந்தபோது ப்ரீத்தி அவருடன் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்பட்டது

(2 / 11)

யுவராஜ் சிங்-கிம் ஷர்மா: ப்ரீத்தி ஜிந்தாவுக்குப் பிறகு, நடிகை கிம் ஷர்மாவுடன், யுவராஜ் சிங் இணைத்து பேசப்பட்டார். இவர்கள் இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து பின்னர் பிரிந்தனர்

(3 / 11)

சௌரவ் கங்குலி - நக்மா: பாலிவுட், தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக இருந்து வந்த நக்மா, சௌரவ் கங்குலியுடன் இணைத்து பேசப்பட்டார். 2000களில் இருவரும் நண்பர்களாக இருந்தனர். பின்னர் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. கங்குலி திருமணத்துக்கு பின், அவர் எனது நண்பர் என்று நக்மா கூறினார். 

(4 / 11)

அஜய் ஜடேஜா - மாதுரி தீட்சித்: பாலிவுட் நடிகையான மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவுடன் டேட்டிங்கில் சில காலம் இருந்தார். ஆனால் ஜடேஜாவின் கிரிக்கெட் கேரியர் மேட்ச் பிக்சிங் காரணமாக முடிவுக்கு வர, மாதுரி தீட்சித் அவரை பிரிந்தார்

(5 / 11)

ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுடேலா:பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் திருமணம் செய்து கொண்டதாக காட்டுத் தீயாய் வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை

(6 / 11)

ரவி சாஸ்திரி - நிம்ரத் கவுர்: ஏர்லிஃப்ட்' பட நடிகை நிம்ரத் கவுர், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. இந்தச் செய்தி 2016இல் வெளி வந்தது. ஆனால் 2015இல் இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் தகவல் உலா வந்தன

(7 / 11)

ஹர்திக் பாண்டியா மற்றும் எல்லி அவ்ராம்: ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை எல்லி அவ்ராம் இடையேயான டேட்டிங் பரவலாக பேசப்பட்டது.  இவர்கள் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து உலா வந்துள்ளனர். ஆனால் திடீரென பிரந்தனர்

(8 / 11)

விராட் கோலி - தமன்னா: 2012 ஆம் ஆண்டில், தமன்னாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் டேட்டிங் செய்வதாகவும் வதந்தி பரவியது. இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்து நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.  சில காலம் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது

(9 / 11)

கேஎல் ராகுல் - நிதி அகர்வால்:நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை மணந்துள்ள கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல், தென்னிந்திய நடிகை நிதி அகர்வாலுடன் ஒன்றாக இரவு உணவருந்தும்போது பாப்பராசிகளால் பலமுறை காணப்பட்டார். இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ராகுல் மற்றும் நிதி இருவரும் தாங்கள் நண்பர்கள் என்று கூறினார்கள்

(10 / 11)

ஜஸ்பிரித் பும்ரா - அனுபமா பரமேஷ்வரன்: தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பெயர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைத்து பேசப்பட்டது. இவர்களின் உறவு குறித்து பல வதந்திகள் வெளியாகின. இறுதியாக, பும்ராவும் நானும் நல்ல நண்பர்கள் என்று அனுபமா தெளிவுபடுத்தினார்

(11 / 11)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்