“ சைவ உணவுல அவ்வளவு ஆப்ஷன் இருக்கு… உங்க தேவைக்காக வாயில்லா ஜீவன கொல்றது ரொம்ப ரொம்ப தப்பு..” - வேதிகா பேட்டி!
மில்க் இன்ஸ்டீரில இப்ப ஒரு பசுவை செயற்கையா கருத்தரிக்க வச்சு, கன்னுக்குட்டி பிறந்த உடனே, அத அம்மாக்கிட்ட இருந்து பிரிச்சு, பால திருடுறாங்க.. கன்னுக்குட்டி ஆண் மாடா இருந்தா அத இறைச்சிக்கு கொண்டு போயிருவாங்க.. - வேதிகா பேட்டி!
(1 / 8)
சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம். அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.
தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன். அப்போது விலங்குகள் மீது வேதிகாவிற்கு இருக்கும் கரிசனம் குறித்து கேட்டேன்
(2 / 8)
விலங்குகள் மேல வேதிகாவுக்கு பெரிய மரியாதை இருக்கே? எப்படி இந்த மாற்றம்?
“என்னோட ஃப்ரீ டைம்ல, என்னோட நாய் கூடதான் பெரும்பான்மையான நேரத்த கழிப்பேன். மனுஷங்க கூட இருக்குறத விட, அவங்க கூட இருக்கும் போது, நான் ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன். நான் இப்ப முழுக்க, முழுக்க வெஜிடேரியனா மாறிட்டேன். இதனால என்னோட உடம்புல பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு.
நான் வெஜிடேரியனா மாறுனதுக்கு காரணமே விலங்குகள்தான். ஆமா,நான் இப்ப பால் சமந்தமான பொருட்கள், அசைவ உணவுகள், முட்டை உள்ளிட்ட எதையும் சாப்பிடுறதில்ல.
(3 / 8)
மில்க் இன்ஸ்டீரில இப்ப ஒரு பசுவை செயற்கையா கருத்தரிக்க வச்சு, கன்னுக்குட்டி பிறந்த உடனே, அத அம்மாக்கிட்ட இருந்து பிரிச்சு, பால திருடுறாங்க.. கன்னுக்குட்டி ஆண் மாடா இருந்தா அத இறைச்சிக்கு கொண்டு போயிருவாங்க.. பெண் மாடா இருந்தா.. அம்மாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை குழந்தைக்கும் வந்துரும்.
(4 / 8)
விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடிதான் அதுக்கான உணவை எடுத்துக்கும். ஆனா, மனுஷங்களுக்கு சைவத்துல அவ்வளவு உணவுகள் இருந்தாலும், அவங்க விலங்குகள சாப்பிடுறதுக்கு தேர்ந்தெடுக்குறாங்க..
அது ரொம்ப ரொம்ப தப்பு..
(5 / 8)
என்னோட நான் நாய முதல்ல வீட்டுக்கு கொண்டு வந்தப்ப.. முதல்ல என்னால அத முழுமையா புரிஞ்சிக்க முடியல.. காரணம், அதனால பேச முடியாது. அது என்ன நினைக்குது, மகிழ்ச்சியா இருக்கா இல்லையா, அதுக்கு பசிக்குதா? அப்படிங்கிற எல்லா விஷயத்தையும் நாமதான் கண்டு பிடிக்கணும்.. இந்த மாதிரி விஷயங்கள சரியா தெரிஞ்சிக்கிறதுகாகத்தான் சில விஷயங்கள தேடுனேன்.
(6 / 8)
அந்த தேடல்தான் 'What does fear look like' வீடியோ பார்த்தேன்.
அதுக்கு முன்னாடி வரைக்கும், மாடு சோகமா இருக்கும், மாடு அழும் போன்ற விஷயங்கள்லான் எனக்குத் தெரியாது. அதுல இருந்து நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன்.
(7 / 8)
மாடோ, பன்னியோ, கோழியோ அது எல்லாவே ரொம்ப ரொம்ப புத்திசாலியானவை; அவைகள நாம ஒரு உயிரா பாக்காம.. ஒரு பொருளா ட்ரீட் பண்றோம். நீ
மற்ற கேலரிக்கள்