Varalaxmi sarathkumar: இரண்டாவது மனைவி என வந்த சலசலப்பு.. ‘உங்களுக்கு ஏத்த மாதிரியெல்லாம்’ - வெளுத்த வரலட்சுமி!
உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம்.
(1 / 5)
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் நடித்து வருபவரும், பிரபல நடிகரான சரத்குமாரின் மகளுமானவர் வரலட்சுமி சரத்குமார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
(2 / 5)
வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகள் இருவரும் பழகிய நிலையில், தற்போது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நிக்கோலாய் சச்தேவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், வரலட்சுமி இரண்டாவது மனைவியாகிறாரா? என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. இதனை பலரும் பல விதமாக பேசினர். இதற்கு வரலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
(3 / 5)
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ உலகத்திற்கு ஏற்ற வகையில் பெண்களை மாற்றுவது குறித்து சிந்திக்காதீர்கள்.
(4 / 5)
உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம்.
(5 / 5)
உங்களுக்கான விதிமுறைகளில் வாழும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் உங்களை குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் உங்களுக்காக இருக்கப்போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்காக இருக்கப்போகிறீர்கள். ஆகையால் வாழ ஆரம்பியுங்கள். பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மற்ற கேலரிக்கள்