“20 வருஷமா இந்த பொண்ணு ஹீரோயின் தான்பா” தமிழ் சினிமாவின் கனவு கன்னி த்ரிஷா பிறந்தநாள் சிறப்பு புகைப்படத் தொகுப்பு!
ஜோடி படம் தொடங்கி தற்போது உள்ள தக்லைஃப் வரை ஹீரோயினாக மட்டுமே பயணித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை த்ரிஷா அவரது 42 ஆவது பிறந்தநாளினை இன்று (03/05/2025)கொண்டாடுகிறார்.
(1 / 7)
1983 ஆம் ஆண்டு மே 4 அன்று இந்த அழகிய புயல் பிறந்தது. வளர்ந்தது, படித்தது என அனைத்தும் சென்னையில் தான். 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் தக்லைஃப் வரை வந்துள்ளது. இன்னும் அவரது அசத்தலான நடிப்பில் நாம் பல படங்களை பாரக்கப்போகிறோம். 30 வயதினை தாண்டினாலே அக்கா, அம்மா ரோலில் நடிக்கும் தமிழ் சினிமாவில் இன்று வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்.
(2 / 7)
1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி பட்டம் வென்ற கையோடு ஜோடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் அக்காலக்கட்டத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிக்க மாட்டேன் எனவும், “Acting is not a cup of my tea” எனக் கூறியிருப்பார். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
(3 / 7)
விஜய், அஜித், ரஜினி மற்றும் கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த ஒரே நடிகை இவர் மட்டுமே. அதிலும் இன்றும் இவருக்கு தமிழ் சினிமாவில் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. இவர் எந்த நடிகருடன் நடித்தாலும் கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்திப் போகும்.
(4 / 7)
இவர் சமீப காலமாக நடித்து வரும் அனைத்து படங்களும் ஹிட் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக முக்கியமாக சினிமா பாணியில் சொன்னால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட் குறையாமல் இருக்கும் ஒரே நடிகை இவர் தான். தமிழ் மட்டும் அல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இவர் தான் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.
(5 / 7)
சில ஆண்டுகளுக்கு முன்பும், தற்போதும் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் உடன் நடித்த எல்லா படங்களும் ரசிகர்கள் இடத்தில் அதிக வரவேற்பு பெற்றன. அதற்கு காரணம் இருவருடனும் த்ரிஷாவுக்கு ஜோடி பொருத்தம் பக்காவாக இருப்பதாகும். இந்த நிலையில் த்ரிஷாவின் ரசிகர்கள் அவரது 42 ஆவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
(6 / 7)
பொன்னியன் செல்வன் இரண்டு பாகங்களிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். உலக அழகி ஐஸ்வர்யாவே வந்தாலும் குந்தவையாக இவர் தோன்றும் காட்சிகள் அற்புதமாக இருக்கும். கார்த்தியுடன் காதல் காட்சிகளில் ரசிகர்களின் மனதையும் சேர்த்து கவர்ந்து இழுப்பார் நம் குந்தவை.
(7 / 7)
16 வயதில் திரை உலகிற்கு வந்த இந்த சுட்டிப் பெண் இப்போது தமிழ் சினிமா வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒரு முக்கியமான கதாநாயகியாக மாறி விட்டார். இன்றும் இவருக்கு ரசிகர்கள் குறைந்தபாடில்லை. இன்னும் பல ஆண்டுகள் இவரது நடிப்பால் நம்மை மகிழ்விக்க போகிறார். தனலட்சுமியாக, கவியாக, குந்தவையாக, மோகினியகய என எல்லா கதாபாத்திரங்களோடும் பொருந்தி போகிறார். 42 ஆவது பிறந்தாநாளை கொண்டாடும் த்ரிஷாவிற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மற்ற கேலரிக்கள்