தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Shanthi: ‘லால எனக்கு பிடிக்காது.. அவனுக்கு கொஞ்சம் கூட நன்றியே கிடையாது; என் புருஷன் செத்தப்ப’ - சாந்தி விளாசல்!

Actress Shanthi: ‘லால எனக்கு பிடிக்காது.. அவனுக்கு கொஞ்சம் கூட நன்றியே கிடையாது; என் புருஷன் செத்தப்ப’ - சாந்தி விளாசல்!

May 18, 2024 12:03 PM IST Kalyani Pandiyan S
May 18, 2024 12:03 PM , IST

Actress Shanthi Williams: என்னுடைய கணவர் வில்லியம்ஸ் ஒரு மிகச் சிறந்த கேமராமேன். இன்றைய காலகட்டத்தில், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக அவ்வளவு தூரம் மேலே ஏறி, யாரும் கேமராவை வைத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் - சாந்தி விளாசல்!

Actress Shanthi: ‘லால எனக்கு பிடிக்காது.. அவனுக்கு கொஞ்சம் கூட நன்றியே கிடையாது; என் புருஷன் செத்தப்ப’ - சாந்தி விளாசல்!

(1 / 6)

Actress Shanthi Williams: திரைப்படங்களிலும், சீரியல்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் அண்மையில் மின்னம்பலம் ப்ளஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை கடுமையாக சாடியிருக்கிறார். நன்றி கிடையாதுஇது குறித்து அவர் பேசும் போது, “மோகன்லாலுக்கு நான் பலமுறை சமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவனுக்கு நன்றியே கிடையாது. என்ன இப்படி பேசுகிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அதற்குப் பின்னால் சோக சம்பவம் இருக்கிறது.   

(2 / 6)

என்னுடைய கணவர் வில்லியம்ஸ் ஒரு மிகச் சிறந்த கேமராமேன். இன்றைய காலகட்டத்தில், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக அவ்வளவு தூரம் மேலே ஏறி, யாரும் கேமராவை வைத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் வில்லியம்ஸ் அன்றே அப்படிப்பட்ட ரிஸ்கை எல்லாம் எடுத்தார். இன்று அதனையெல்லாம் கிரேன்கள் செய்து கொண்டிருக்கின்றன. எனக்கு பிடிக்காது என்ன வில்லியம்ஸூக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். ஆனால் அவர் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பார். எங்களுடைய இரண்டாவது திரைப்படம் ஹலோ மெட்ராஸ் கேர்ள். அந்த திரைப்படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜும், ஊர்வசியும் கதாநாயகிகளாக நடித்தார்கள்.   

(3 / 6)

எங்களுடைய சொந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாளத் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதில் அவர் நடித்தார். அப்போதெல்லாம், எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவர், மிகவும் உரிமையாக சாப்பிடுவதற்கு மீன் இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி, ருசியாக சாப்பிடுவார். இறுதிச்சடங்கிற்கு கூட வரவில்லை என்னுடைய அம்மாவும் மிகவும் அன்போடு அவருக்கு செய்து கொடுப்பார். இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். வீட்டிற்கு வரும் போது, சாப்பாடு கேரியரையும் அவர் தூக்கிக் கொண்டு வருவார். அப்படி அன்போடும், அரவணைப்போடும் இருந்த மோகன்லால், என்னுடைய கணவர் இறந்தபோது, அவரின் இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை.   

(4 / 6)

ஆகையால், எனக்கு மோகன்லால் பிடிக்கவே பிடிக்காது. உலகத்திற்கெல்லாம் அவரை மிகவும் பிடித்திருக்கலாம் ஆனால் எனக்கு பிடிக்காது. காரணம் என்னவென்றால் வில்லியம்ஸ் என்பவர், இவரை வைத்து நான்கு படங்களை செய்தார். அப்போதெல்லாம், அவருடைய வாயிலிருந்து லால் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தையே வராது.  

(5 / 6)

60,000 கொடுக்க வேண்டும்.அப்படி அரவணைப்போடு வில்லியம்ஸ் இவரை வைத்து வேலை வாங்கினார். அவருக்கு நாங்கள் அப்போது 60,000 கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் கூட, அவருக்கு நடந்து சென்று கஷ்டப்பட்டு அவரிடம் சென்று கொடுத்தேன். அதைப்பார்த்த அவர், என்னை பார்த்து சேச்சி நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கொண்டு வர வேண்டுமா என்று கேட்டான். ஆனால் என்னை ஒரு முறை விமான நிலையத்தில் பார்த்த பொழுது, அவன் தலை தெறிக்க ஓடினான். இவனுக்கு என்றைக்குமே என்னிடத்தில் மரியாதை என்பதே கிடையாது” என்று பேசினார். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்