சிறந்த நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்.. கணவர் அஜித்துடன் என்ஜாய் செய்த ஷாலினி.. வைரல் போட்டோஸ்
நடிகர் அஜித் குமார் இன்று அவரது 54வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஷாலினி.
(1 / 6)
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் இன்று அவரது 54வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், நடிகையும் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
(2 / 6)
இந்தப் புகைப்படங்கள் கடந்த ஆண்டு அஜித் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் இந்த சிறந்த நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்க வேண்டியவை என்றும் கூறி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
(3 / 6)
இந்த புகைப்படங்களில் நடிகர் அஜித்தும் ஷாலினியும் பைக்கின் மீது அமர்ந்து ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். ஷாலினி பைக் ரேஸர்கள் போல ஜாக்கெட் அணிந்திருக்கிறரா். இவர்களிக்கு பின்னால், 53வது வயதை குறிப்பிடும் வகையிலும், பிறந்தநாள் கொண்டாட்ட பலூன்களும் காணப்படுகிறது.
(4 / 6)
இந்த கொண்டாட்டத்தில் அஜித் ஷாலினி மற்றும் அவர்களது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரும் உள்ளனர்.
(5 / 6)
நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்திற்கு பின் கார் ரேஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதில் வெற்றியும் பெற்று வருகிறார்.
மற்ற கேலரிக்கள்