’காதல் மற்றும் அலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும்’ - தனது திருமண படங்களைப் பகிர்ந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’காதல் மற்றும் அலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும்’ - தனது திருமண படங்களைப் பகிர்ந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!

’காதல் மற்றும் அலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும்’ - தனது திருமண படங்களைப் பகிர்ந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!

Jan 03, 2025 10:28 PM IST Marimuthu M
Jan 03, 2025 10:28 PM , IST

  • நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது நீண்ட கால நண்பரை மணமுடித்தார். அந்த புகைப்படத்தொகுப்பினைப் பார்க்கலாம். 

நடிகை சாக்‌ஷி அகர்வால், கோவாவில் தனது நீண்டகால நண்பர் நவ்நீத்தை திருமணம் செய்துள்ளார். 

(1 / 6)

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது, ‘’ சிறுவயது நட்பு முதல் ஆத்ம தோழர்கள் வரை, கோவா வானத்தின் கீழ், காதல் மற்றும் அலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும் 'என்றென்றும்' பந்தத்தில் இருப்பதாக உணர்ந்தோம். இதோ வாழ்நாள் முழுவதும் காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லாத நினைவுகளுடன் வாழப்போகிறோம்’’என எழுதியிருந்தார், சாக்‌ஷி அகர்வால். 

(2 / 6)

உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலை பூர்வீகமாக கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். 

(3 / 6)

சாக்‌ஷி அகர்வால் சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரிந்துகொண்டே, வார இறுதி நாட்களில் மாடலிங்கில் ஈடுபட்டார்.  குறிப்பாக,மலபார் கோல்டு போன்ற நிறைய விளம்பரங்களில் நடித்தார். 2013ஆம் ஆண்டு முதல் முழுமையாக  தனது பாதை நடிப்பு என தேர்ந்தெடுத்தார். 

(4 / 6)

2013ஆம் ஆண்டு, ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால், காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார். 

(5 / 6)

2021ஆம் ஆண்டு, டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த சாக்‌ஷி அகர்வால், அரண்மனை 3 திரைப்படத்தில் ஹேமா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் 2019ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியிலும் பங்கேற்றார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்