நடிகை என்பதை தாண்டி சமூக செயற்பாட்டாளர்! உனக்குள் நானே உருகும் இரவில் பாடலே சாட்சி! யார் இவர்?
- சினிமாத்துறையில் நடிகை, பின்னணி குரல் கலைஞர், கவிஞர் என பன்முகத் திறன் கொண்ட ரோகினி சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
- சினிமாத்துறையில் நடிகை, பின்னணி குரல் கலைஞர், கவிஞர் என பன்முகத் திறன் கொண்ட ரோகினி சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
(1 / 7)
1969ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசைக்காக திரையுலகிற்கு வந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். (Instagram)
(2 / 7)
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோகிணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமில்லாமல் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் “உனக்குள் நானே உருகும் இரவில்” என்ற அற்புதமான பாடலை எழுதியதும் இவர் தான். (starsunfolded)
(3 / 7)
ரோகிணி 1996 ஆம் ஆண்டு நடிகர் ரகுவரணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2004 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ரிஷி வரன் என்ற ஒரு மகன் உள்ளார் . பிரிவிற்கு பின்னரும், ரகுவரனின் மறைவிற்குப் பின்னரும் அவருடனான காதலை நெகிழ்ச்சியில் பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
(4 / 7)
தெலுங்கில் அறிமுகமான ரோகிணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் இதுவரை சுமார் 130 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் அம்மாவான தற்போதைக்கு முக்கிய தேர்வாக ரோகிணி இருந்து வருகிறார். (starsunfolded)
(5 / 7)
நடிகையாக இருக்கும் ரோகிணி “அப்பாவின் மீசை” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகவில்லை. பல விழிப்புணர்வு குரும்படங்களையும் இயக்கியுள்ளார். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் நடிகை ஜோதிகாவுக்கு குரல் கொடுத்துள்ளார் மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இருவர் மற்றும் ராவணன் திரைப்படத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
(6 / 7)
ரோகினியின் கதாபாத்திரங்கள் எப்போது ஒரு உருக்கமான உணர்வை ரசிகர்களிடையே பதித்து விடும். விருமாண்டி படத்தில் ஏஞ்சலா காட்டமுத்து கதாபாத்திரம் தஞ்சாவூரில் கீழவெண்மணி எனும் கூறும் போதே அவ்வளவு தைரியமான தோரணையுடன் கூறுவார். மலக்குழி மரணங்களின் அவலத்தை கூறும் விட்னஸ் திரைப்படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மற்ற கேலரிக்கள்