Actress Revathi: ஈடுபாடு தெரியல.. 20 வயதில் செய்த தவறு.. இன்று வருந்தும் ரேவதி!
நடிகை ரேவதி Touring Talkies என்ற யூடியூப் சேனலில் தான் செய்த தவறு குறித்து பேசி உள்ளார்.
(1 / 5)
நான் கல்யாணம் அந்த வயதில் செய்திருக்க கூடாது. இன்னும் ஒரு நான்கு வருடங்கள் தாண்டி கல்யாணம் செய்து இருக்க வேண்டும்.
(2 / 5)
ஏனெனில், அந்த சமயத்தில் தான் மௌனராகம் மற்றும் புன்னகை மன்னன் படங்கள் செய்து இருந்தேன். அது முடிந்ததும் கல்யாணம் செய்து கொண்டேன். இன்னும் கொஞ்சம் நிறைய நல்ல படங்கள் செய்து முடித்த பிறகு கல்யாணம் பண்ணிருக்க கூடாதா? என பல முறை நினைத்து இருக்கிறேன்.
(3 / 5)
ஆனால், அப்போது அந்த எண்ணம் வரவே இல்லை. அது இப்போது தான் எனக்கு வந்து இருக்கிறது. 17 வயதிலிருந்து 20 வயது வரை படம் நடித்து வந்தேன். பின்னர் திருமணம் செய்து கொண்டேன்.
(4 / 5)
திருமணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கினேன். அதை மக்கள் எப்படியோ ஏற்று கொண்டனர்.
மற்ற கேலரிக்கள்