Vidaamuyarchi: விடாமுயற்சியில் ரொம்ப கவர்ச்சியான கேரக்டர்.. சுருட்டைமுடி வைச்சிருந்தேன்.. ரெஜினா கசாண்ட்ரா பேட்டி
- விடாமுயற்சியில் ரொம்ப கவர்ச்சியாக இருக்கிற மாதிரியான கேரக்டர்.. சுருட்டைமுடி வைச்சிருந்தேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
- விடாமுயற்சியில் ரொம்ப கவர்ச்சியாக இருக்கிற மாதிரியான கேரக்டர்.. சுருட்டைமுடி வைச்சிருந்தேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்து, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் திரைப்படம், விடாமுயற்சி.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் யூட்யூப் சேனலில், நடிகை ரெஜினா விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
(2 / 6)
'விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவு பற்றி சொல்லுங்க?
ஹைதராபாத்தில் சூட் செய்யும்போது, விடாமுயற்சி படத்தின் முதல் டீஸர் வந்தது. முதலில் எல்லோருக்கும் போட்டு காட்டுனாங்க. ஏதோ ஸ்க்ராட்ச் மியூசிக் போட்டுட்டு, காட்டுனாங்க. அதுவே, ரொம்ப கிரிப்பிங்காக இருந்தது. Raw Footage அதனை எடிட் பண்ணி காட்டுனாங்க. அதுவே திரில் மாதிரி, அடுத்து என்ன ஆகப்போகுது, அப்படின்னு ஒரு ஆர்வம் கிரியேட் பண்ணுச்சு. சாதாரணமாக ஒரு விசுவலே இருந்தது. அதுவே நல்லாயிருந்தது.
ஓம் பிரகாஷ் சாருடைய ஃபிரேம் திருப்தியா இருந்தது. செட்டில் ரொம்ப கலகலப்பான நபர். நான் இதுக்கு முன்னாடி அவர் கூட வொர்க் பண்ணியிருக்கேன். அவருடைய ஃபிரேமில் எல்லோருமே பார்க்க ரொம்ப நல்லாயிருந்தாங்க'.
(3 / 6)
'விடாமுயற்சி படத்தில் அவர் மாதிரி தான் எனக்கு சுருட்டை முடி. முன்பே, எனக்கு சுருட்டை முடி இப்படி இருக்கணும்னு தோணும். அதை மகிழ் திருமேனி சாரும் முன்பே உறுதி செய்தார். அதன்பின், தான், எனக்கு இப்படி சுருட்டை முடி வேணும்னு அப்படி தயார் ஆனது. ஆனால், அங்கு இருக்கிற வெப்பத்தில் என்ன மாதிரி பண்ணனும் ஒரு குழப்பம் இருந்துச்சு. ஆனால், இயக்குநர் மகிழ் சார், அந்த சுருட்டை முடியோட ரொம்ப அழகாக இருக்கிற மாதிரி என்னை காட்ட முயற்சித்தார். ரொம்ப கவர்ச்சியாக இருக்கிற மாதிரியான கேரக்டர் அது. அந்த கேரக்டருக்கும் அந்த முடி அப்படி இருக்கணும்னு சொன்னாங்க. அதனால், விடாமுயற்சி படத்தில் சுருட்டை முடியில் நான் இருந்தேன்.
விடாமுயற்சி டிரெய்லரில் நீங்க நல்லாயிருந்தீங்கன்னு பலர் சொன்னாங்க. அதைத்தவிர, பலர் கெட்டப் ரொம்ப நல்லாயிருக்குன்னு மெசேஜ் செய்தாங்க. அதுவே, படம் ரிலீஸுக்கு முன்பு, நாம் நினைத்ததைப் பூர்த்தி பண்ணினமாதிரி இருந்தது.'
(4 / 6)
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விடாமல் முயற்சி பண்ணுறது என்றால் எதைச் சொல்வீங்க?
வாழ்க்கையே விடாமுயற்சி தான் பண்ணிட்டு இருக்கேன்(சிரிக்கிறார்). வாழ்க்கையே ஏதாவது ஒரு முயற்சி தானே.
உங்களது கமிட்மென்ட்டுகளோடு வாழ்றது, ஃபேமிலிக்குண்டான கமிட்மென்ட், வேலைக்கு கமிட்மென்ட், ரிலேஷன்ஷிப் கமிட்மென்ட் இது எல்லாத்துக்குமே விடாமுயற்சி தான் பண்ணனும். இதையெல்லாம் விட்டுட்டு அப்படியே போயிடமுடியாது இல்ல. நமக்கும் வாழ்க்கையில் சில கோல்ஸ் இருக்கும். சிலது கிடைக்கும். சிலது கிடைக்காது. அப்போது விடாமுயற்சி தான் செய்யணும்.
(5 / 6)
அனிருத் உடைய இசை கேட்கும்போது எப்படி இருந்தது?
எனக்கு விடாமுயற்சி படத்தில் பின்னணியில் வந்த வயலின் இசை பிடித்திருந்தது. முதல் தடவை ட்ரெய்லர் ரிலீஸாகும்போது, அடுத்து முதல் பாட்டு ரிலீஸாகும்போது, அந்த இசை ரொம்பப்பிடிச்சிருந்தது. இப்போது அந்த இசை என் தலையில் உட்கார்ந்து இருச்சு. குறிப்பாக, இளம் ஆடியன்ஸை ஈர்க்கிற மாதிரி அனிருத் இசை இருந்தது.
மற்ற கேலரிக்கள்