முன்னணி ஹீரோயின் ஆசை.. லிவிங் டூ கெதர்.. பிரேக்அப்.. காதலருடன் திருமணம்.. ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி காதல் கதை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முன்னணி ஹீரோயின் ஆசை.. லிவிங் டூ கெதர்.. பிரேக்அப்.. காதலருடன் திருமணம்.. ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி காதல் கதை

முன்னணி ஹீரோயின் ஆசை.. லிவிங் டூ கெதர்.. பிரேக்அப்.. காதலருடன் திருமணம்.. ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி காதல் கதை

Jan 02, 2025 12:39 PM IST Marimuthu M
Jan 02, 2025 12:39 PM , IST

  • ரம்யா கிருஷ்ணனின் காதல் கதை பல திருப்பங்கள் நிறைந்தது.  இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் உலுக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தவர். ஆனால், நடிகை ரம்யா கிருஷ்ணனின் காதல் திருமணத்தில் பல திருப்பங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது.

(1 / 6)

ரம்யா கிருஷ்ணன் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகையாக முயற்சித்து, ’வெள்ளை மனசு’ என்னும் படம் மூலம் ஹீரோயின் ஆனார். அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ரஜினிகாந்தின் படிக்காதவன், கமல்ஹாசனின் பேர் சொல்லும்பிள்ளை ஆகியப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதே தோற்றப்பொலிவுடன் நடித்து வருகிறார், ரம்யா கிருஷ்ணன்.

(2 / 6)

ரம்யா கிருஷ்ணனின் தனிப்பட்ட வாழ்க்கையும் கொஞ்சம் சுவாரஸ்யமானது. டாப் ஹீரோயினாகும் பொருட்டு மற்ற ஹீரோயின்களைப் போல, இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளவில்லை, ரம்யா கிருஷ்ணன்.

(3 / 6)

1998ஆம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜூனாவை வைத்து சந்திரலேகா என்னும் படத்தை கிருஷ்ண வம்சி இயக்கிய போது, அப்படத்தின் ஹீரோயினாக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் படத்துக்குப்பின், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், அதை கிருஷ்ண வம்சியின் குடும்பத்தினர் மறுத்தனர். 

(4 / 6)

ஆரம்பத்தில் கிருஷ்ண வம்சியை ரம்யா கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லையாம். பின்னர் தான் பிடித்துப் போயிருக்கிறது. அதன்பின், ஜூன் 2003ல் ஹைதராபாத்தில் கிருஷ்ண வம்சியை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார், ரம்யா கிருஷ்ணன். அப்படியிருந்தும், அவர்கள் எவ்வளவு காலம் ஒன்றாக இருப்பார்கள் என்று பலர் கிசுகிசு பேசினர். ஆனால் இந்த ஜோடி 20 ஆண்டுகளைத் தாண்டி ஒன்றாக வாழ்ந்து வருகிறது.

(5 / 6)

ரம்யா கிருஷ்ணனும், கிருஷ்ணவம்சியும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வசித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் அடிக்கடி சண்டையிட்டனர், பிரிந்தனர், மீண்டும் இணைந்தனர். இறுதியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ரித்விக் வம்சி என்ற ஒரு மகன் இருக்கிறார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்