தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Premi: ‘இன்னொருத்தி புருஷன்னு தெரிஞ்சும் லவ்… தப்பாகிடுச்சு’ - மகேந்திரன் உறவு குறித்து ஓப்பனாக பேசிய பிரேமி!

Actress Premi: ‘இன்னொருத்தி புருஷன்னு தெரிஞ்சும் லவ்… தப்பாகிடுச்சு’ - மகேந்திரன் உறவு குறித்து ஓப்பனாக பேசிய பிரேமி!

Apr 15, 2024 07:29 PM IST Kalyani Pandiyan S
Apr 15, 2024 07:29 PM , IST

உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இயக்குநர் இவர்தான் என்று முதலில் எனக்கு தெரியாது. அது தெரியாமல், நான் அந்த ஹோட்டலுக்கு சென்றேன். பார்த்தால் அங்கு மகேந்திரன் இருக்கிறார். 

நடிகர் மகேந்திரனுக்கும் தனக்கும் இடையே இருந்த காதல் குறித்து நடிகை பிரேமி பேசி இருக்கிறார்.இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய அவர்,   “எனக்கு மகேந்திரன் சாரை முதலில் தெரியாது. நடிகர் செந்தாமரை மூலமாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தான் நான் முதன்முறையாக அவரை பார்த்தேன்.  

(1 / 5)

நடிகர் மகேந்திரனுக்கும் தனக்கும் இடையே இருந்த காதல் குறித்து நடிகை பிரேமி பேசி இருக்கிறார்.இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய அவர்,   “எனக்கு மகேந்திரன் சாரை முதலில் தெரியாது. நடிகர் செந்தாமரை மூலமாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தான் நான் முதன்முறையாக அவரை பார்த்தேன்.  (wikipedia )

அதன்பிறகு முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு ஆடிசனுக்கு என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கு செல்வதற்கு முன்னே அங்கு போக வேண்டாம் என்று என்னுடைய மனது கூறியது. அதனால் நான் அங்கு செல்லவில்லை.  உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இயக்குநர் இவர்தான் என்று முதலில் எனக்கு தெரியாது. அது தெரியாமல், நான் அந்த ஹோட்டலுக்கு சென்றேன். பார்த்தால் அங்கு மகேந்திரன் இருக்கிறார். அதன் பின்னர்தான் அந்தப்படத்தின் இயக்குநர் அவர் என்று தெரிய வந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம்,பார்த்தோம், பழகினோம். விருப்பப்பட்டோம்.  

(2 / 5)

அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் அவரை விரும்பினேன். அது தவறு. அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்த பின்னராவது நான் அவரை விட்டு சென்று இருக்க வேண்டும். அதுதான் நியாயமான விஷயம். அந்த விஷயத்தில் நான் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை நான் நன்றாகவே அனுபவித்து விட்டேன்.   

(3 / 5)

அவருடன் கிட்டத்தட்ட நான் ஒரு ஏழு வருடங்கள் வாழ்ந்தேன். எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார். அதனால் அவரால் இரண்டு குடும்பத்தையும் கையாள முடியவில்லை.   

(4 / 5)

அதனால் அவர் என்னை விட்டு விலகி விட்டார். அவர் பிரிந்த பின்னர், நான் மிக மிக கஷ்டப்பட்டேன். மன ரீதியாகவும் சரி, பணரீதியாகவும் சரி, மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்தேன். என்னுடைய குடும்பம்தான் அந்த சமயத்தில் எனக்கு கை கொடுத்து, அவர்களோடு அணைத்துக் கொண்டது. நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். தனி மனுஷியாக இருந்து என்னுடைய பையனை  வளர்த்தேன்.” என்று பேசினார். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்