நடிகைகள் என்ன பொம்மையா எளிதில் தொட்டுவிட? கடுப்பான நித்யா மேனன்.. அப்படி என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நடிகைகள் என்ன பொம்மையா எளிதில் தொட்டுவிட? கடுப்பான நித்யா மேனன்.. அப்படி என்ன நடந்தது?

நடிகைகள் என்ன பொம்மையா எளிதில் தொட்டுவிட? கடுப்பான நித்யா மேனன்.. அப்படி என்ன நடந்தது?

Published Jun 01, 2025 02:59 PM IST Malavica Natarajan
Published Jun 01, 2025 02:59 PM IST

நடிகைகளை யாரும் சாதாரண பெண்கள் என நினைப்பதில்லை. அவர்கள் எளிதில் தொட்டுவிடும் பொம்மைகளாக நினைக்கின்றனர் என நடிகை நித்யா மேனன் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகை நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெண் நடிகைகள் குறித்த பார்வை தன்னை சங்கடப்படுத்துவதாக தெரிவித்தார்.

(1 / 6)

(instagram)

சாதாரண பெண்களை நடத்தும் விதத்தில் யாரும் நடிகைகளை நடத்துவதில்லை. நாங்கள் நடிகைகள் என்பதால், எங்களை எளிதில் அணுகலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

(2 / 6)

நாங்கள் ஒரு நிகழ்வுக்குச் செல்லும்போதெல்லாம், ரசிகர்கள் எங்களை கைகுலுக்கச் சொல்வார்கள். ஆனால், ஒரு சாதாரண பெண்ணிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை. நடிகைகளை எளிதில் அணுகலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

(3 / 6)

தொட்டு பேசவும் ஒட்டி புகைப்படம் எடுக்கவும் சுலபமாக நினைக்க நாங்கள் என்ன பொம்மைகளா?" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

(4 / 6)

சில நாட்களுக்கு முன்பு, நித்யா மேனன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ​​ஒரு ரசிகர் அவரிடம் கைகுலுக்கச் சொன்ன போது, தனக்கு சளி பிடித்திருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

(5 / 6)

பின்னர் அவர் மேடையில் நடிகரை கட்டிப்பிடித்து கைகுலுக்கிய நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் நித்யா மேனனை விமர்சித்ததால் இந்த விளக்கத்தை அளித்தார்.

(6 / 6)

மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்