தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Namitha: ‘தமிழ்நாட்ல உயிர் கொடுத்தது கேப்டன்தான்’.. பிறந்தநாளில் கண்கலங்கி பேசிய நடிகை நமீதா

Actress Namitha: ‘தமிழ்நாட்ல உயிர் கொடுத்தது கேப்டன்தான்’.. பிறந்தநாளில் கண்கலங்கி பேசிய நடிகை நமீதா

May 10, 2024 09:21 PM IST Kalyani Pandiyan S
May 10, 2024 09:21 PM , IST

இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். அதற்காக கோயிலுக்கு சென்று பூஜைகள், அபிஷேகம் அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்தேன். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், விஜயகாந்த் இறந்த நேரத்தில், என்னால் அவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை.

நடிகை நமீதா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று ஆசீர்வாதம் பெற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் பேசும் போது, "இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். அதற்காக கோயிலுக்கு சென்று பூஜைகள், அபிஷேகம் அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்தேன். நான்  இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், விஜயகாந்த் இறந்த நேரத்தில், என்னால் அவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை.  

(1 / 5)

தமிழ்நாட்டில் எனக்கு உயிரை கொடுத்தது விஜயகாந்த் அவர்கள்தான்.என்னுடைய பிறந்தநாளான இன்று எனக்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். தமிழ்நாட்டில் எனக்கு உயிரை கொடுத்தது விஜயகாந்த் அவர்கள்தான். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.  

(2 / 5)

 படப்பிடிப்பின் போது அவர் சேரில் உட்கார மாட்டார். அவரது கழுத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில் கர்சீப் கட்டி இருப்பார். எதற்காக என்றால் மேக்கப், சட்டையில் பட்டு, சட்டை நாசமாகி விடக்கூடாது என்பதற்காக... 

(3 / 5)

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; அதற்காகத்தான் இப்படி இருக்கிறேன்!ஒரு நாள் நான் அவரிடம், ஏன் சேரில் உட்கார மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் எப்பொழுதுமே வேலை செய்யும் இடத்தில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இப்படி இருக்கிறேன் என்று சொன்னார்.  

(4 / 5)

அதனைதொடர்ந்து நானும் படப்பிடிப்பில் அவ்வாறு இருக்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. அவர் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். ஒரு ராஜா போல அமர்ந்திருப்பார்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நமீதா கண்கலங்கினார். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்