கங்குலியுடனான ரிலேஷன்ஷிப்.. திருமண ஆசை.. 90களின் கனவுக்கன்னி.. பாட்ஷா நாயகி நக்மாவின் கதை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கங்குலியுடனான ரிலேஷன்ஷிப்.. திருமண ஆசை.. 90களின் கனவுக்கன்னி.. பாட்ஷா நாயகி நக்மாவின் கதை

கங்குலியுடனான ரிலேஷன்ஷிப்.. திருமண ஆசை.. 90களின் கனவுக்கன்னி.. பாட்ஷா நாயகி நக்மாவின் கதை

Dec 25, 2024 06:16 AM IST Marimuthu M
Dec 25, 2024 06:16 AM , IST

  • நடிகை நக்மாவின் பிறந்த நாள் தொடர்பான சிறப்பு புகைப்படத்தொகுப்பினைக் காணலாம். 

நடிகை நக்மா தமிழில் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடிருத்திருக்கிறார். நடிகை ஜோதிகாவின் சகோதரியும் ஆவார். இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல், தற்போது அரசியல் வாழ்க்கையில் பிஸி ஆக உள்ளார். 1990-ம் ஆண்டு இந்தியில் வெளியான பாஹி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நக்மா.

(1 / 6)

தொடர்ந்து இந்தி தெலுங்கு, படங்களில் நடித்து வந்த நக்மா, 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் படமான பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

(2 / 6)

1990ஆம் ஆண்டே பாலிவுட்டில் அறிமுகமான நக்மா இந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார்.பாட்ஷா படத்தில் நடித்த பிறகு ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பெரிய தம்பி ன பல படங்களில் நடித்தார். தீனா படத்தில் ஒரு பாடலுக்கும், சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அந்தப் படம்தான் அவர் தமிழில் நடித்த கடைசி படம்.

(3 / 6)

அடுத்து 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்ட விஷயம் அன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி மற்றும் நடிகை நக்மா இடையேயான உறவுதான். இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், அப்போது கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தாலும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அது நிலைக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர்.

(4 / 6)

இவர்கள் பிரிவுக்கான காரணம் குறித்து நக்மா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதில், கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாத காலத்தில் கங்குலி பின்னடவைச் சந்தித்திருந்தார். அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன.அவரின் தோல்விக்கும், அவர் சரியாக ஆடாததற்கும் தன்னுடனான உறவு தான் காரணம் சொல்லப்பட்டது. எனவே இருவரின் பழக்கம் யாருடைய சொந்த வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடாது எனக் கருதி பிரிந்துவிட்டோம் எனக் கூறியுள்ளார்.

(5 / 6)

இதனிடையே சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசிய நக்மா தனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் இல்லை எனவும், தனக்கும் ஒரு குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன் எனவும், தன் திருமணம் விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆனால் திருமணம் செய்து கொண்டால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.இவர் கடைசியாக 2008ஆம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்ததோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்தார். இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்