எல்லாம் போச்சு.. மீண்டும் எங்கள் வாழ்க்கை ஜீரோவாகிவிட்டது.. மைனா நந்தினி வெளியிட்ட எமோஷனல் வீடியோ!
- நடிகை மைனா நந்தினி ஒரே ஒரு வெப் தொடரால், சம்பாதித்து வைத்த மொத்த பணமும் போய்விட்டது. மறுபடியும் எங்கள் வாழ்க்கை ஜீரோவாகிவிட்டது என எமோஷனலாக பேசி இருக்கிறார்.
- நடிகை மைனா நந்தினி ஒரே ஒரு வெப் தொடரால், சம்பாதித்து வைத்த மொத்த பணமும் போய்விட்டது. மறுபடியும் எங்கள் வாழ்க்கை ஜீரோவாகிவிட்டது என எமோஷனலாக பேசி இருக்கிறார்.
(1 / 6)
சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய பெயரை மைனா நந்தினி என மாற்றிக்கொண்டார்.
(2 / 6)
அதன் பிறகு சீரியல், சினிமா, வெப் சீரிஸ் நடித்து வரும் நந்தினி, Love Action Drama என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து நடித்து வருகிறார்.இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் தங்களுடைய யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
(3 / 6)
அந்த வீடியோவில் புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரை நாங்கள் தயாரித்து வருகிறோம். இந்த வெப்தொடர் இதுவரை நான்கு எபிசோடுகள் வெளியாக இருக்கின்றன. அடுத்த எபிசோடிற்காக நாங்கள் இலங்கைக்கு சென்று 11 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு, சென்னை வந்தோம். எடிட்டிங் செய்வதற்காக அந்த ஹார்ட் டிஸ்கை எடுத்த போது அது தவறுதலாக கீழே விழுந்துவிட்டது.
(4 / 6)
இதைதை படமாக்க யூடியூப்பில் தாங்கள் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் செலவு செய்தது மட்டுமின்றி, மேலும் கைகாசையும் போட்டு எடுத்ததாகவும், தற்போது அதை மீட்க லட்சக்கணக்கில் செலவாகும் என சொல்கிறார்கள்,
(5 / 6)
மேலும் அவர்கள் பேசுகையில், வழக்கமாக படப்பிடிப்பு நடத்தும் போது இரண்டு காப்பி எடுப்போம். ஆனால் நாங்கள் ஒரு ஹார்ட் டிஸ்கில் அனைத்தையும் பதிவு செய்துவிட்டு, மற்றொரு ஹார்ட் டிஸ்கை டிஏவிருக்கு வீடியோ அனுப்பும் ஹார்ட் டிஸ்காக மாற்றிவிட்டோம். அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. அதில் இருப்பதை ரெக்கவர் செய்வதற்கு பல லட்சங்கள் கேட்டார்கள். ஆனால் இந்த வெப் தொடருக்காக கையில் இருந்த அனைத்து பணத்தையும் போட்டு விட்டதால் மீண்டும் ரெக்கவரி செய்வதற்கு எங்களிடம் பணம் ஏதும் இல்லை.
(6 / 6)
மறுபடியும் எங்கள் வாழ்க்கை ஜீரோவாகிவிட்டது. நல்ல உயரத்திற்கு சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பமாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் வேதனையுடன் பதிவிட்டுள்ளனர். மேலும் இனி புள்ளத்தாச்சி வெப் தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் வராது என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்