தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Kushboo: ‘பாடாய்படுத்திய பிசிஓடி பிரச்சினை; குழந்தை பேறு இல்லை என்ற டாக்டர்;கை கொடுத்து காதல் தந்த சுந்தர் சி

Actress Kushboo: ‘பாடாய்படுத்திய பிசிஓடி பிரச்சினை; குழந்தை பேறு இல்லை என்ற டாக்டர்;கை கொடுத்து காதல் தந்த சுந்தர் சி

May 17, 2024 07:46 AM IST Kalyani Pandiyan S
May 17, 2024 07:46 AM , IST

Actress Kushboo: பிசிஓடி பிரச்சினையால் தான் அவதியுற்றதையும், அதற்கு சுந்தர் சி துணைநின்ற கதையையும் குஷ்பு பகிர்ந்து இருக்கிறார். 

Actress Kushboo: ‘பாடாய்படுத்திய பிசிஓடி பிரச்சினை; குழந்தை பேறு இல்லை என்ற டாக்டர்;கை கொடுத்து காதல் தந்த சுந்தர் சி!

(1 / 5)

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய கர்ப்ப காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.பிசிஓடி பிரச்சினை இது குறித்து அவர் பேசும் போது, “நிறைய பெண்களுக்கு பிசிஓடி பிரச்சினைகள் இருக்கும். எனக்கும் அப்போது அது போன்ற பிரச்சினைகள் இருந்தன. நான் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை சோதித்த மருத்துவர், நான் குழந்தை பெற்றுக் கொள்வது கொஞ்சம் கடினம் என்று கூறியிருந்தார்.   

(2 / 5)

சுந்தர் சி என்னிடம் காதலை சொல்லும் பொழுது, உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தான் காதலை வெளிப்படுத்தினார். அப்படி ஒருவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கும் பொழுது, அவரிடம் சென்று உங்களுக்கு என்னால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இதனையடுத்து அவரிடம் நான் விலகிக் கொள்கிறேன் நீங்கள் வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அவருடைய அதிர்ஷ்டமா இல்லை துரதிஷ்டவசமா தெரியவில்லை. கடவுள் இந்தப் பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியோடு கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.  

(3 / 5)

நான் கர்ப்பமாக இருக்கிறேன்கல்யாணத்திற்கு பின்னர், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை உணர்ந்த பொழுது, அது எனக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுத்தது. அதை வார்த்தையால் வர்ணிக்கவே முடியாது. எனக்கு மட்டுமல்ல எந்த தாயாலும் அந்த சந்தோஷத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. 

(4 / 5)

உங்களுடைய ரிசல்ட் பாசிட்டிவ் ஆக வந்தவுடன், உங்களுடைய உலகமே முற்றிலுமாக மாறிவிடும். நான் கர்ப்பம் தரித்த பொழுது, சுந்தர் சி வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார்.அவருக்கு போன் செய்து, நான் கர்ப்பமாக இருப்பதை சொன்னேன். அவருக்கு கை கால் ஓடவில்லை.மொத்த படக்குழுவுக்கும் பிரியாணி மற்றும் இனிப்புகளை வாங்கி கொடுத்து, கொண்டாடித் தீர்த்து விட்டார். நமக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்பது முற்றிலுமாக வேறு விதமான ஒரு உணர்வு. அடுத்த 10 மாதங்கள் சுந்தர் சி என்னுடைய சுண்டு விரல் கீழ்தான் இருந்தார். நான் உட்கார சொன்னால் உட்காருவார். எழுந்திருக்கச் சொன்னால் எழுந்திருப்பார். இரவு 2 ½ மணிக்கு எழுந்து சாப்பாடு வேண்டுமென்று சொல்வேன். அந்த நேரத்தில் அவர் எழுந்து என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, சாப்பிடு வாங்கிகொடுப்பார்.” என்று பேசினார்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்