Krithika annamalai: ‘4 வருஷம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணேன்.. முடியல.. வெறுத்து ஒதுங்கிட்டேன்’ - கிருத்திகா விவாகரத்து கதை!
அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு வருடம் தள்ளி போடலாம் என்று சொன்னேன்.ஆனால் இரு வீட்டு தரப்பும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை;ஒரு வருடத்தில் மகனும் பிறந்தான். அவன் பிறந்த மூன்று மாதத்திலேயே, எனக்கும் கணவருக்கு இடையே பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிட்டது.
(1 / 5)
பிரபல் சீரியல் நடிகையான கிருத்திகா தன்னுடைய விவாகரத்து குறித்து அவள் கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, “ஒரு பிரச்சினை என்றால் சொல்லலாம். நிறைய பிரச்சனைகள் அந்த உறவுக்குள் வந்தன. அப்போது நான் மூன்று சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்தேன்.
(2 / 5)
அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு வருடம் தள்ளி போடலாம் என்று சொன்னேன்.ஆனால் இரு வீட்டு தரப்பும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை;ஒரு வருடத்தில் மகனும் பிறந்தான். அவன் பிறந்த மூன்று மாதத்திலேயே, எனக்கும் கணவருக்கு இடையே பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிட்டது.
(3 / 5)
இதற்கிடையே அவருக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் பண விஷயத்திலேயே எங்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவானது. ஒரு கட்டத்தில் அவர் வீட்டில் உட்கார வேண்டிய நிலை உருவானது. இதனால் கல்யாணம் முடிந்து மூன்று வருடம் கழித்து, நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை.
ஆண்கள் வீட்டில் இருந்து பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலை இருந்தால் அது சரியாக இருக்காது. இருதரப்பு வீட்டிற்கும் பிரச்சினை மூண்டது. அது பெரிய பிரச்சினையாக வெடித்தது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஓரளவிற்கு தானே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியும்.
(4 / 5)
அம்மாவும் கணவர் இல்லாமல் வாழ்ந்ததால், பெண்ணும் அப்படி ஆகிவிட்டாள் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருந்ததால், கணவருக்கும் எனக்கு நடந்த பிரச்சினையை, என்னுடைய வீட்டில் நான் சொல்லவில்லை.
(5 / 5)
ஆனால் ஒரு கட்டத்தில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். அதைக் கேட்ட என்னுடைய அம்மா என்னை திட்டியதோடு மட்டுமில்லாமல், இதை ஆரம்பித்திலேயே முடித்திருக்க வேண்டும் என்று சொன்னார்.
காரணம் என்னவென்றால், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்து 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இருந்தாலும் நான் அனுசரித்து நடந்து கொள்கிறேன் என்று சொல்லி அவருடன் நான்கு வருடங்கள் வாழ்ந்தேன். என்னால் நீடிக்க முடியவில்லை இதனையடுத்து தான் நான் விவகாரத்து செய்து கொண்டேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்