HBD Shamlee : 2 வயசுல என்னா நடிப்பு.. 90ஸ் பார்த்து வியந்த குழந்தை நட்சத்திரம்.. நடிகை பேபி ஷாமிலி பிறந்தநாள் இன்று!
- இவரது முதல் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ நடை. இருந்தாலும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த படம் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி தான். இந்தப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக தேசியவிருதே கொடுக்கப்பட்டது.
- இவரது முதல் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ நடை. இருந்தாலும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த படம் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி தான். இந்தப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக தேசியவிருதே கொடுக்கப்பட்டது.
(1 / 7)
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்த பேபி ஷாமிலி. நடிகை மற்றும் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றவர்.
(2 / 7)
மல்லூடி என்ற மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டி கொண்ட குழந்தையாக நடித்ததற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை பெற்றுள்ளார் பேபி ஷாமிலி.
தமிழ்திரை உலகில் அக்காவும், தங்கையும் குழந்தை நட்சத்திரத்தில் ஜொலித்தார்கள் என்றால் அது பேபிஷாலினியும், பேபிஷாமிலியும் தான்.
(3 / 7)
நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே தமிழ்சினிமாவில் நடித்து பிரபலமானவர். சிவாஜி, அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரது தங்கை ஷாமிலி. இவரும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
(4 / 7)
இவர் தனது 2ஆவது வயதிலேயே நடிக்க வந்து விட்டார். இவரது முதல் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ நடை. இருந்தாலும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த படம் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி தான். இந்தப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக தேசியவிருதே கொடுக்கப்பட்டது.
(5 / 7)
அது மட்டும் அல்லாமல் தமிழக அரசின் விருதும் இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து தைப்பூசம், செந்தூர தேவி, அன்பு சங்கிலி, தேவர் வீட்டு பொண்ணு, வாசலிலே ஒரு வெண்ணிலா ஆகிய படங்களில் நடித்தார்.
(6 / 7)
அஜீத், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யாராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கமலா என்ற கேரக்டரிலும் ஷாமிலி நடித்தார்.
மற்ற கேலரிக்கள்