தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Anuya Latest Interview About Suchi Leaks Morphing Photos And Kollywood Tamil News

Actress Anuya: ‘அதுக்கு மட்டும் அவங்களுக்கு ஐட்டம் கேர்ள் வேணுமா?’ - கொந்தளித்த SMS அனுயா!

Feb 04, 2024 01:00 PM IST Kalyani Pandiyan S
Feb 04, 2024 01:00 PM , IST

அந்த சமயத்தில் அது என்னை மிகவும் எமோஷனலான பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. இதனால் எனக்கு மனரீதியாக கடுமையான பாதிப்புக்கு உள்ளானேன்.

நடிகை அனுயா பேட்டி!

(1 / 6)

நடிகை அனுயா பேட்டி!

நடிகை அனுயா இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் சில காரசாரமான விஷயங்களை பேசி இருக்கிறார்.  அவர் பேசும் போது, “ ஐட்டம் கேர்ளாக நான் நடித்திருக்கிறேன். ஐட்டம் கேர்ள் கதாபாத்திரத்தை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், என்னைப்பொருத்தவரை அங்கு ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும்.  

(2 / 6)

அவ்வளவுதான். எனக்கு நடனம் ஆடுவது மிக மிக பிடிக்கும். அதனால் அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஒத்துக்கொண்டேன். ஆனால் திரைத்துறையில் இதை பார்ப்பவர்கள் அந்த பெண் ஐட்டம் கேர்ள் கதாபாத்திரத்தில் அல்லவா நடித்தது என்று பேசுவார்கள். பாடலுக்கு மட்டும் ஒரு ஐட்டம் கேர்ள் வேண்டும். காரணம் அவர்களுக்கு படத்தில் ஐட்டம் சாங் இருக்க வேண்டும். பெண்களின் முகமானது இந்த திரைத்துறையில் தவறாக பிரதிபலிக்கப்படுகிறது. சுஜி லீக்ஸில் என்னுடைய ஆபாச படம் வெளியான பின்னர்சினிமாவே வேண்டாம் என்று நினைத்தேன்.  

(3 / 6)

அந்த சமயத்தில் அது என்னை மிகவும் எமோஷனலான பக்கத்திற்கு அழைத்துச் சென்றது.இதனால் எனக்கு மனரீதியாக கடுமையான பாதிப்புக்கு உள்ளானேன். ஆனால் இவ்வளவு நாள் நீங்கள் ஒரு அறையில் உட்கார்ந்திருக்க முடியும். ஒரு நாள் இல்லை ஒரு நாள் வெளியே வந்து தானே ஆக வேண்டும். அதன் பின்னர் அதிலிருந்து வெளியே வந்தேன்.   

(4 / 6)

உண்மையில் மார்ஃபிங் என்பது மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும். காரணம் என்னவென்றால், நானே அதனை கடந்து வந்திருக்கிறேன். சிலர் சாதாரணமாக பெண்களை புகைப்படம் எடுக்கிறார்கள். பார்த்தால் அதை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள்.இதனால் பெண்கள் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.  

(5 / 6)

அந்த வகையில் என்னுடைய மார்ஃபிங் போட்டோ வெளியான பொழுது என்னுடைய குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக நின்றனர். அதனால் என்னால் அதிலிருந்து வெளியே வர முடிந்தது காரணம், அவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்.இன்று இன்டர்நெட்டில் மிக எளிமையாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்ய முடிகிறது. இன்னொரு விஷயம் அது மார்ஃபிங் தான் என்று நம்மால் மறுத்து கூட பேச முடியவில்லை. அந்த நிலைமை தான் இருக்கிறது. உண்மையில் சிலர் இதனை தொழிலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்இது மட்டுமல்ல ஒரு பெண் கல்யாணம் முடிந்து கணவன் வீட்டுக்கு சென்று விட்டால், கணவனோ உங்களது அம்மா வீடு தான் உனக்கு வீடு என்று சொல்கிறார். ஆனால் இந்த பக்கம் தாயோ, உன் கணவன் வீடு தான் உன்னுடைய வீடு என்று சொல்கிறார். அப்படியானால் உண்மையில் ஒரு பெண்ணுக்கு எதுதான் வீடு?” என்று பேசினார்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்