மன்னிப்பு தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.. இந்த துண்டை அப்படி எடுத்தேன்னா.. விஜயகாந்தின் மாஸ் வசனங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மன்னிப்பு தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.. இந்த துண்டை அப்படி எடுத்தேன்னா.. விஜயகாந்தின் மாஸ் வசனங்கள்!

மன்னிப்பு தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.. இந்த துண்டை அப்படி எடுத்தேன்னா.. விஜயகாந்தின் மாஸ் வசனங்கள்!

Dec 28, 2024 01:32 PM IST Marimuthu M
Dec 28, 2024 01:32 PM , IST

  • நடிகர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பேசிய சில நல்ல வசனங்களை நினைவுகூர்வோம். 

‘’இந்த துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போறேன்னு அர்த்தம்.  இந்த துண்டை தோள்ல போட்டேன்னா தீர்ப்பு சொல்லப்போறேன்னு அர்த்தம். இந்த துண்டை அப்படி எடுத்து வைச்சேன்னா பட்டையைக் கிளப்பப்போறேன்னு அர்த்தம்'' என சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் படுபிரபலம்

(1 / 6)

‘மக்களை மிஞ்சுற அதிகாரமும் இல்லை. அரசாங்கமும் இல்லை. அரசியல்னா என்னனு தெரியுமா உங்களுக்கு. நடந்துமுடிஞ்ச சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த ஒரு வேட்பாளர் இருக்கார். அது வேறுயாரும் இல்லை. இந்திய ஜனநாயகம் தான். நான் அரசியலுக்கு வந்து தான் அந்த ஜனநாயகத்தைக் காப்பத்தனும் முடிவு பண்ணிட்டால் அந்த அரசியலை நேராக செய்து தான் எனக்குப் பழக்கம். வருவேன், வரமாட்டேன், சைடில் நின்னு எட்டிப்பார்ப்பேன் பூச்சிகாட்டமாட்டேன்’என நரசிம்மா படத்தில் வசனம்பேசியிருப்பார், நடிகர் விஜயகாந்த். 

(2 / 6)

‘’துளசி வாசம் மாறினாலும் மாறும். இந்த தவசி வார்த்தை மாறமாட்டான். தரையில் இடிவிழுந்தால் தப்பிச்சுக்கலாம். தலையில் விழுந்தால்.. இந்த தவசிக்கு அன்பா பேசவும் தெரியும்; அவசியப்பட்டா அரிவாள் வீசவும் தெரியும்'' என தவசி படத்தில் வசனம்பேசியிருப்பார், நடிகர் விஜயகாந்த். 

(3 / 6)

‘’அமைதியா இருப்போம். நமக்கு அடக்கமாக இருக்கவும் தெரியும். அரிவாள் எடுக்கவும் தெரியும். பதுங்கினால் பயந்துட்டோம் என்று அர்த்தமில்லை. பாய்வோம். குறிதவறாமல் பாய்வோம். வன்முறைக்கு வன்முறை பதில் இல்லை. நாம் அடிச்சால் ஒரு அர்த்தம் இருக்கனும்'' என நெறஞ்ச மனசு படத்தில் வசனம் பேசியிருப்பார், நடிகர் விஜயகாந்த்

(4 / 6)

‘’என் பாதுகாப்பில் இருக்கிற கைதிங்கிறதால தான் உன்னை உயிரோட விட்டு வைக்கிறேன். கார்கில் போர் கத்துக்கொடுத்தது மறந்துபோச்சா. எங்களுக்கும் அகிம்சையும் தெரியும். அணுகுண்டு வெடிக்கவும் தெரியும். காந்தி பிறந்த இதே நாட்டில் தான் சுபாஷ் சந்திரபோஸும் பிறந்திருக்கார். நான் காந்தியா நடந்துக்குறதும் சுபாஷ் சந்திரபோஸாக மாறுறதும் இனிமேல் நீ நடந்துக்கிறதில் தான் இருக்கு'' என வல்லரசு படத்தில் மாஸாக வசனம் பேசியிருப்பார், நடிகர் விஜயகாந்த்.

(5 / 6)

‘’மன்னிப்பு தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை'' என ரமணா படத்தில் விஜயகாந்த் பேசியது இன்றும் பட்டித்தொட்டியெங்கும் வைரல் ஆன ஒன்று. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்