Actor Vijay Politics: ‘யாருக்காவது ஆட்சேபனை இருக்கா?’; விஜய் கட்சி குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி; என்ன விஷயம்?-actor vijay politics election commission released the list of administrators thalapathy vijay tvk administrators list - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Vijay Politics: ‘யாருக்காவது ஆட்சேபனை இருக்கா?’; விஜய் கட்சி குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி; என்ன விஷயம்?

Actor Vijay Politics: ‘யாருக்காவது ஆட்சேபனை இருக்கா?’; விஜய் கட்சி குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி; என்ன விஷயம்?

May 11, 2024 07:45 PM IST Kalyani Pandiyan S
May 11, 2024 07:45 PM , IST

Actor Vijay Politics: நடிகர் விஜய்க்கு சொந்தமான தமிழக வெற்றிக்கழகம் கட்சியின், நிர்வாகிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

‘யாருக்காவது ஆட்சேபனை இருக்கா?’; விஜய் கட்சி குறித்து தேர்தல் ஆணையம்! நிர்வாகிகள் பட்டியல் உள்ளே!

(1 / 7)

பிரபல நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக்கழகம்’ கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறது. 

(2 / 7)

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கூடவே, கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும், தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டது.

(3 / 7)

இந்த நிலையில் தற்போது, கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த தகவலானது பொது நோட்டீஸாக வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் தமிழக கட்சி நிர்வாகிகள் குறித்தான விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.   

(4 / 7)

அதன் படி, அதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

(5 / 7)

மேலும், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அது குறித்து தெரிவிக்கமுறைப்படி தேர்தல் ஆணையத்தை அணுகுமாறும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  

(6 / 7)

ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது, அந்தக் கட்சியின் பெயரை பொது நோட்டீஸாக வெளியிடப்பட்டு, யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் கருத்து தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் ஒதுக்கப்பட்டு, கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும்.  ஒரு வேலை யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அந்தப் பெயரும் கட்சியும் பதிவு செய்யப்படாது  

(7 / 7)

மற்ற கேலரிக்கள்