TVK Vijay : இப்தார் நோன்பு திறக்க வந்த விஜய்.. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tvk Vijay : இப்தார் நோன்பு திறக்க வந்த விஜய்.. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த சம்பவம்!

TVK Vijay : இப்தார் நோன்பு திறக்க வந்த விஜய்.. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த சம்பவம்!

Published Mar 07, 2025 08:14 PM IST Stalin Navaneethakrishnan
Published Mar 07, 2025 08:14 PM IST

  • TVK Vijay : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வருகை வந்தார். அப்போது அங்கு க்ளிக் செய்யப்பட்ட அவருடைய போட்டோக்கள் சில.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.

(1 / 6)

(PTI)

அதில் த.வெ.க சார்பில் நோன்பு கஞ்சியும், 2 ஆயிரம் நபர்களுக்காக மட்டன் பிரியாணியும் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

(2 / 6)

ஒய்.எம்.சி.ஏ திடலுக்கு பிரசார வாகனம் மூலம் விஜய் வந்தார். குறிப்பாக, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் விஜய் வருகை தந்தார்.

(3 / 6)

அந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றுகிற இங்கு உள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டதில் மிக்க மிக்க மகிழ்ச்சி, என்றார்.

(4 / 6)

மேலும் விஜய் பேசுகையில், உங்க எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதன்பின், நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரசார வாகனத்தில் நின்றவாறு மக்களைப் பார்த்து கையசைத்தவாறு விஜய் புறப்பட்டார்

(5 / 6)

விஜய் வருகை முன்பே திட்டமிட்டது என்பதால், ஏராளமான அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை தடுக்க பவுன்சர்கள் முயற்சி செய்தும், அவர்களை மீறி, தடுப்புகளை மீறி ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர்.

(6 / 6)

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்