Unni mukundan: ‘6 வருஷம் ஆக்ஷனே பண்ணல.. மூளை இல்லாத நடிகர்ன்னு சொல்லி ஓரங்கட்டிருவாங்க’- உன்னி முகுந்தன்
Unni mukundan: அதிரடி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்றுமுடிவை எடுத்தேன். ஏனென்றால் கேரளாவில், நீங்கள் அதிரடி படங்களை மட்டுமே செய்யும்போது துணிச்சலான மற்றும் மூளை இல்லாத நடிகராக ஓரங்கட்டப்படுவீர்கள். - உன்னி முகுந்தன்
(1 / 6)
Unni mukundan latest interview: மலையாள சினிமாவில், அண்மையில் வெளியான மார்கோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 120 கோடி மேல் வசூல் செய்த இந்தப்படத்தில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார்.
மலையாள சினிமாவில் எடுக்கப்பட்ட மிகவும் வன்முறையான படமாக பார்க்கப்படும் இந்தப்படம் ஏப்ரல் மாதம் தென் கொரியாவிலும் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் மார்கோ படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்
(2 / 6)
6 ஆண்டுகளாக ஆக்ஷன் படங்கள் இல்லையே?
"எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில், நான் துணை வேடங்களிலும், சில பெண்களை மையப்படுத்தி வெளியான படங்களில் நடித்தேன். வில்லனாக நடித்தேன். எல்லாமே நல்ல படங்கள். அதன் பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நிராகரித்த ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அந்தப்படம் வெற்றி பெற்றது. அதிலிருந்து நான் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டேன்.
(3 / 6)
ஆனால், அதன் பிறகு, எனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும்; எனது நடிப்பு திறமையை நிரூபிக்கவும் விரும்பினேன்.
(4 / 6)
6 வருட காலத்திற்கு அதிரடி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்றுமுடிவை எடுத்தேன். ஏனென்றால் கேரளாவில், நீங்கள் அதிரடி படங்களை மட்டுமே செய்யும்போது துணிச்சலான மற்றும் மூளை இல்லாத நடிகராக ஓரங்கட்டப்படுவீர்கள்.
(5 / 6)
தேசிய விருதுகளை வென்ற மேப்பாடியன் (2022) படத்தை தயாரித்து நடித்தேன். மாலிகாபுரம் (2022) 100 கோடிக்கு மேல் வசூலித்தது, ஜெய் கணேஷ் (2024) நல்ல வசூல் பார்த்தது.
ஆறு ஆண்டுகளாக நடிப்பு சார்ந்த படங்களில் என்னை நிரூபித்து, ஒரு நல்ல நடிகராக முத்திரை பதித்த பிறகு, நான் மீண்டும் ஆக்ஷன் களத்தில் இறங்க முடிவு செய்தேன்.
மற்ற கேலரிக்கள்